சினிமா நடிகைகளில், ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக எதையும் பேசக்கூடியவர்கள். தங்களது கருத்தை, பொதுவெளியில் வைக்க கூடியவர்கள். அந்த வகையில் ராதிகா, ஜோதிகா, குஷ்பு, ரேவதி, சுகாசினி, ரோகினி, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களை சொல்லலாம். ஆனால், அவர்கள் வரம்பு மீறி, மிகவும் ஆபாசமாக எந்த இடத்திலும் பேசியதாக தெரியவில்லை. ஆனால், சில நடிகைகள் ஏதோ வித்யாசமாக பேசுவதாக நினைத்து, சிக்கலை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
நடிகை அமலா பால், பிரபு சாலமன் இயக்கிய ‘ மைனா’ படத்தின் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து, அழகான இளம் நடிகையாக, ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதற்கிடையே இயக்குநர் விஜயை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில், அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2019ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘ஆடை’. இதில் ஒரு வித்யாசமான கேரக்டரில், அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு காட்சியில் உடலில் துணியே இல்லாமல் நடித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஹாலிவுட் நடிகைகள் மட்டுமே இதுபோன்ற காட்சிகளில் துணிச்சலாக நடிக்கும் நிலையில், தமிழ் படத்தில் அமலாபால் இப்படி நடித்ததை ரசிகர்கள் பாராட்டவும் செய்தனர், விமர்சிக்கவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஹைலைட் ஆன விஷயமாக, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமலாபால் பேசிய பேச்சு, சமீபமாக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. விழா மேடையில் பேசிய அமலா பால், படத்தின் கதையை சொல்லும் போதே, ஒரு காட்சியில் உடம்பில் ஆடை இல்லாமல் நடிக்க வேண்டும் என்பதை கூறியிருந்தனர். ஆனால், அப்படி நடிக்க போகும்போது மிகவும் தயக்கமாக, மனதுக்குள் ஒருவித பயமாக இருந்தது.
படப்பிடிப்பு தளத்தில், கேமரா மேன் உள்ளிட்ட 15 பேர் அந்த இடத்தில் இருந்தனர். அப்போது, அங்கிருந்தவர்களை எல்லாம், கணவனாக நான் நினைத்துக்கொண்டு அந்த காட்சியில் நடித்தேன். பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் தான், ஆனால், இப்போது எனக்கு 15 கணவர்கள் என்ற எண்ணத்தில், தைரியமாக அந்த காட்சியில் ஆடையின்றி நடித்தேன், என்று கூறியிருக்கிறார்.
‘ஆடை’ என்ற படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக, அப்படிப்பட்ட காட்சியில் துணிச்சலாக நடித்ததை, ஒரு தரப்பு ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், அமலாபால் கூறிய இந்த உதாரணம், பலரையும் அதிருப்தியடைய செய்திருக்கிறது. புராண கால இதிகாசத்தில் இருந்து பாஞ்சாலியை உதாரணமாக காட்டி, அவருக்கு 5, எனக்கு 15 கணவர்கள் என அமலாபால் பேசி இருப்பது, பலருக்கும் பிடிக்கவில்லை. இதை கடுமையாக விமர்சனம் செய்து, சமூக வலைதளங்களில், தங்களது காட்டமான பதிவுகளை இட்டு வருகின்றனர்.





