- Advertisement -
Homeபொழுதுபோக்குதமன்னா அடிக்கடி செல்லும் நடிகர் வீடு எது தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

தமன்னா அடிக்கடி செல்லும் நடிகர் வீடு எது தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

- Advertisement -

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. முதல் படமே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு கவனம் பெற்றார். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடாததால் தமன்னா விரைவில் காணாமல் போய்விடுவார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் அடுத்தடுத்து வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு சரியான திருப்புமுனை எதுவும் கிடைக்கவில்லை.

அவருக்கு ரசிகர்களின் கவனம் பெற்றுக் கொடுத்தது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம். அத்திரைப்படத்தில் பக்குவமாகவும் அழகாகவும் நடித்து ஸ்கோர் செய்திருந்தார். இதனால் காணாமல் போய்விடுவார் என கணிக்கப்பட்ட தமன்னாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்ப்கள் கிடைத்த வண்ணம் இருந்தன. அதனை அவர் சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார்.

- Advertisement -

அதன்படி விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, தனுஷ் என முன்னாடி நடிகர்களுடன் வரிசையாக ஜோடி போட்டார் தமிழில் எப்படியோ அதேபோல் தெலுங்கிலும் தனது முத்திரையை பதித்தார். இன்னும் பல வருடங்கள் ஆட்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தனர்.

அதனையடுத்து ஹிந்திக்கு சென்று அங்கு தனது திறமையை நிரூபிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழில் அவர் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினி எவ்வளவு சென்சேஷனலாக இருக்கிறாரோ அதேபோல் தமன்னாவும் சென்சேஷனலாக இருக்கிறார். அந்தப் படத்தில் காவாலா பாடலுக்கு போட்ட நடனத்தால் தமிழ்நாட்டில் மீண்டும் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் தமன்னா பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சுறா படத்தில் விஜய்யுடன் ஆடியபோது பல விஷயங்களை கற்றுக் கொண்டாராம் தமன்னா. விஜய்யும் டான்ஸ் குறித்த சில இன்புட்ஸ்களையும் கொடுத்திருக்கிறார். அது அவருக்கு ரொம்பவே உதவியாக இருந்ததாம். மேலும் பிரபுதேவா உடன் தேவி படத்திலிருந்து நடித்தபோது அவரிடம் இருந்தும் நடனங்களையும் அதன் நுணுக்கங்களையும் கற்றுத் தெரிந்திருக்கிறார்.

இந்தச் சூழலில் இப்போதும்கூட நடனத்தில் ஏதேனும் சந்தேகம் வந்தாலோ ஆட முடியுமா என்ற அச்சம் வந்தாலோ உடனடியாக மும்பையில் இருக்கும் பிரபுதேவாவின் வீட்டுக்குதான் தமன்னா செல்வாராம். அங்கு சென்று பிரபுதேவாவிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு செட்டுக்கு வந்து வேறு லெவலில் ஆடிக்கொடுத்துவிடுவாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி அதிகம்பேரால் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

- Advertisement -

சற்று முன்