விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த சீசன் நிறைவடைய உள்ளது. அதில் சான்ட்ரா கானா வினோத் திவ்யா கணேஷ் விக்கல்ஸ் விக்ரம் அரோரா மற்றும் சபரிநாதன் ஆகிய 6 பேர் இறுதி போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருந்து வந்தனர்.
இதற்கிடையே இந்த வாரத்தில் இந்த சீசனில் எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்ட பழைய போட்டியாளர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டனர். அந்த வகையில் வியானா திவாகர் பிரவீன் ராஜ் பிரவீன் காந்தி அப்சரா கெமி ரம்யா ஜோ ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பணப்பெட்டி டாஸ்க் நடந்தது. அதில் ரூ. 18 லட்சம் இருந்த நிலையில் அந்த பணப்பெட்டியை கானா வினோத் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது. ஏனென்றால் அவர்தான் டைட்டில் வின்னர் என்பது பார்வையாளர்கள் மத்தியில் ஏற்கனவே முடிவாகி இருந்தது.
அதனால் டைட்டில் வின்னராக வேண்டியவர் இப்படி ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டாரே, அரோரா சொன்னதை கேட்டு ஏமாந்து விட்டாரே என்று புலம்பி அழுது வீடியோ வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் கானா வினோத் மற்றும் அவரது மனைவி பாக்யாவும் இருந்தார்.
அப்போது பேசிய கானா வினோத், மக்களின் காலாக நினைத்து இந்த மேடையை தொட்டு கும்பிட்டுக்கிறேன். அந்த 18 லட்சம் நான் பட்ட கஷ்டத்துக்கு என் குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப தேவையான ஒரு காசாக இருந்தது. உண்மையாக மனசார சொல்கிறேன். யார் சொல்லியும் இதை நான் எடுக்கலே. என்னுடைய சுய நினைவுடன்தான் பணப்பெட்டியை எடுத்தேன் என்று வெளிப்படையாக பேசினார்.
அப்போது அருகில் இருந்த அவரது மனைவி பாக்யா பேசுகையில், என் கணவரின் திறமைக்கு தகுதியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன். இந்த மேடை அதற்கான முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கானா வினோத் விஜய் சேதுபதி குறித்து கானா பாட்டு பாட அவருக்கு தனது கூலிங்கிளாஸ் கண்ணாடியை பரிசாக அளித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.





