விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 10ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. கடந்த 2017 முதல் 2023 வரை நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு கமல்ஹாசன் விலகி விட்டார்.
நடிகர் கமலை தொடர்ந்து 2024ம் ஆண்டு மற்றும் 2025ம் ஆண்டுகளில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 மற்றும் 9 தமிழ் சீசன்களை தொகுத்து வழங்கினார். இப்போது 2026ம் ஆண்டில் நடக்க உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கடந்த ஆண்டுகளை போலவே நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சினிமா நடிகர்கள் நடிகைகள் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் மற்றும் மாடலிங் செய்பவர்கள் அதிகளவில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு இதில் அவர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டாத நிலையில் யூடியூப் பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் இதில் அதிகளவில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே தற்போது பிக்பாஸ் காமன்மேன் ஷோ என்ற போட்டியை நடத்தி அதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். அந்த காமன் மேன் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இதில் இருந்து அதிகளவில் போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 10ல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற செப்டம்பர் மாதம் 6ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 விஜய் டிவியில் துவங்க உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதுகுறித்த ஒரு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9 ஆண்டுகளில் 9 சீசன் நடந்து முடிந்துள்ளது. இப்போது 10வது சீசன் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கி டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைய உள்ளது. இதில் டைட்டில் வின்னராக ஜெயிப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த முறை போலவே 24 மணி நேர லைவ்விலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.





