- Advertisement -
Homeபொழுதுபோக்குசரியான நேரத்தில், தவறான முடிவெடுத்த 6 நடிகர்கள் - தமிழ் சினிமாவில் இனி அவர்களது எதிர்காலம்...

சரியான நேரத்தில், தவறான முடிவெடுத்த 6 நடிகர்கள் – தமிழ் சினிமாவில் இனி அவர்களது எதிர்காலம் என்னவாகுமோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே குதிரை கொம்பான விஷயமாக இருக்கிறது. நடிகர், நடிகை, டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என யாராவது ஒருவரது வாரிசாக இருப்பின் உடனடியாக சினிமாவுக்குள் நுழைந்து விடலாம். இதுதவிர அரசியல் செல்வாக்கு இருப்பவர்களும் சினிமாவில் நடிப்பது எளிதான விஷயம். சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் அண்ணாச்சி போன்ற தொழிலதிபர்களும் சினிமாவில் முகம் காட்டுவது சாத்தியமான விஷயம்தான்.

ஆனால் ஒரு படத்தில் நடித்து விட்டாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வேண்டும் என்றால் அந்த நடிகரிடம் திறமை, உழைப்பு இருக்க வேண்டும். தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். அடுத்தடுத்த படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர வேண்டும். அப்படி இல்லாதவர்கள் முதல் படத்திலேயே காணாமல் போய் விடுவர். இது பலருக்கு நடந்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் படாத பாடுபட்டு சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டு, ஒரு காலகட்டத்துக்கு பிறகு அதை சரியான வழியில் பின் தொடராமல் சில நடிகர், நடிகையர் எடுக்கும் தவறான முடிவுகள், அவர்களது சினிமா கேரியரையே தொலைத்து விடுகிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் திறமையான பல நடிகைகள், திடீரென திருமணம் செய்துக்கொண்டு, சினிமாவை விட்டு விலகுவது, அவர்களது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.

இப்படி இப்போதுள்ள முக்கிய தமிழ் நடிகர்கள் சிலர், இருப்பதை விட்டுவிட்டு பறக்கறதுக்கு ஆசைப்படுகின்றனர். அதன் பின்விளைவுகள் எப்படி அமையப் போகிறது என்பதுதான் ரசிகர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது. அதில் குறிப்பாக, நம்பர் 1 பொசிஷனில் இருக்கும் நடிகர் விஜய், அரசியலுக்கு போகிறார். இதனால், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

அதே போல், தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக்கொண்டு இருக்கும் நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் நடிப்பதை விட இந்தி, ஆங்கில படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்காக தன் மனைவி ஜோதிகா, பிள்ளைகளுடன் மும்பையில் குடியமர்ந்து விட்டார். அதே போல், நல்ல நடிகரான கவுதம் மேனன், இனிமேல் இயக்குவது மட்டுமே என் வேலை. படங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து இருக்கிறார்.

அதே போல் சிறந்த டைரக்டராக பேசப்படும் மிஷ்கின், படங்களை இயக்குவதை விட்டுவிட்டு, இசையமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வில்லன், கேமியோ ரோல்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் சரியாக ஓடுவதே இல்லை. இப்போது வில்லன், கேமியோ ரோலில் நடிக்கவே விஜய் சேதுபதிக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதே போல் நல்ல நடிகரான சித்தார்த்தும், பாடகராக மாறி வருகிறார். இப்படி நல்ல கலைஞர்கள் ரூட் மாறுவது, அவர்களது எதிர்காலம் என்னவாகுமோ, என ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது.

- Advertisement -

சற்று முன்