- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி ஷூட்டிங்கே இன்னும் முடியலே, அதுக்குள்ள இப்படி ஒரு நஷ்டக் கணக்கு சொல்றாங்களே?...

குட் பேட் அக்லி ஷூட்டிங்கே இன்னும் முடியலே, அதுக்குள்ள இப்படி ஒரு நஷ்டக் கணக்கு சொல்றாங்களே? தலை சுத்திப் போன ஏகே ரசிகர்கள் – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் தற்போது நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. தெலுங்கு படங்கள் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட்செய்து வருகிறார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகை திரிஷா, அஜீத் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சென்னை மற்றும் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இப்போது ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடிகர் அஜீத்குமார், திரிஷா பங்கேற்று நடித்து வருகின்றனர். பல முக்கிய காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவை ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஸ்பெயின் நாட்டில் மொத்தம் 50 நாட்கள் குட் பேட் அக்லி படம் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குட் பேட் அக்லி படத்துக்கு மொத்தம் 110 நாட்கள் ஷூட்டிங் நடத்த நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 360 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் நடிகர் அஜீத்குமாருக்கு சம்பளமாக 163 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக இந்த உருவாக்கப்படுகிறது.

குட் பேட் அக்லி படம் குறித்து, மூத்த சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி இன்று வெளியான ஒரு வீடியோவில் கூறியதாவது, நடிகர் அஜீத்குமார் நடிப்பில், மொத்தம் 360 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குட் பேட் அக்லி படம் உருவாகிறது. மொத்தம் 110 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஜீத்குமாரின் சம்பளமாக 163 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் ரூ 10 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணிக்கு தற்போது உள்ள மார்க்கெட் நிலவரப்படி இந்த படத்தின் மொத்த வசூல் நிலவரம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தியேட்டர்கள் மூலம் வருமானம், டிஜிட்டல் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்ட வகையில் மொத்தம் 240 கோடி ரூபாய் முதல் ரூ. 250 கோடி வரை இந்த படத்துக்கு பிசினஸ் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதனால் தற்போது 360 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டில் நஷ்டம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமான மார்க்கெட் நிலவரம் உள்ளதால், அஜீத்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்துக்கு அவ்வளவு தான் பிசினஸ் நடக்கும் என்று பிஸ்மி கூறியிருக்கும் தகவல் அஜீத்குமார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்