- Advertisement -
தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு தமிழக கவர்னர் ஆர்வி அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுனர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தனது இனிமையான இசையமைப்பாலும் மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்த தேவாவின் மறைவு தமிழ் திரை உலகிற்கும் இசை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று தமிழக ஆளுனர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





