- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரி ஒரு படம் பண்ணனும், கதை சொல்லுங்க - நடிகர் ஜீவாவின் திடீர் மனமாற்றம்...

அந்த மாதிரி ஒரு படம் பண்ணனும், கதை சொல்லுங்க – நடிகர் ஜீவாவின் திடீர் மனமாற்றம் – இப்படி ஒரு சம்பவத்துக்கும் ஓகே சொல்லிட்டாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அழகான இளமையான துருதுருப்பான ஒரு நடிகர் ஜீவா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன். நிறைய வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். எப்போதுமே ஜாலியான காதல் சார்ந்த கேரக்டர்களில் ஜீவா நடிப்பு அருமையாக இருக்கும்.

குறிப்பாக சிவா மனசுல சக்தி எப்போதும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு படமாக உள்ளது. அதே போல் கேவி ஆனந்த் இயக்கிய கோ படத்திலும் பத்திரிகை போட்டோகிராபராக ஜீவா நடிப்பு வேற லெவலில் இருந்தது. இப்படி பல படங்களில் ஜீவா அழுத்தமான சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ஜீவாவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை. கடந்த பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் டிடிடி படம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. ஜீவாவுக்கு ஒரு கம்பேக் படமாகவும் இது இருந்தது. அந்த வெற்றியை அடுத்தடுத்து நல்ல படங்கள் தந்து தக்க வைத்துக்கொள்ள ஜீவா முடிவு செய்திருக்கிறார்.

அதற்காக இதுவரை ஏராளமான கதைகளை கேட்ட நிலையில் கடைசியாக 3 கதைகளுக்கு ஓகே சொல்லி இருக்கிறார். விரைவில் அடுத்த படத்தில் நடிக்க ஜீவா தயாராகி வருகிறார். அதே நேரத்தில் மீண்டும் கோ போன்ற ஒரு சிறந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் அரசியல் களம் கொண்ட படத்தில் ஜீவா நடிக்க விரும்புகிறார்.

- Advertisement -

அதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், கோ படம் போன்ற ஜானரில் ஒரு கதை சொல்லுங்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் ஜீவா பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி இனிமேல் நடிக்கும் படத்தின் கதை தான் முக்கியம். அதிக சம்பளம் முக்கியம் இல்லை என்ற முடிவையும் ஜீவா எடுத்துள்ளார்.

எனவே நல்ல கதையாக இருந்தால் போதும். சம்பளத்தை கூட குறைத்துக்கொண்டு நடிக்கிறேன் என்றும் அவர் தானாக முன்வந்து கூறியிருக்கிறார். இப்படி நல்ல படங்களுக்காக நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் சின்ன பட்ஜெட்டிலேயே பெரிய வெற்றிப் படங்களை தர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்