- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஒரு பாராட்டு விழா... அறிக்கை வெளியிட்டு ஆனந்தப்படுத்திய தமிழக வெற்றி கழகம்... தகவலை இணையத்தில்...

மீண்டும் ஒரு பாராட்டு விழா… அறிக்கை வெளியிட்டு ஆனந்தப்படுத்திய தமிழக வெற்றி கழகம்… தகவலை இணையத்தில் பரப்பும் விஜய் ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து வளர்ந்து வந்த சமயத்தில், சில பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். நாட்கள் செல்லச் செல்ல இதற்கு தளபதி மக்கள் இயக்கம் என பெயர் வைக்கப்பட்டது. தனது இயக்கத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள் அளிப்பது, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் அவரது இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர்.

 

- Advertisement -

அவர் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்று அப்போதே சொல்லப்பட்டது. இதற்கு தூண்டுகோலாய் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படியான சூழலில், 2022 ஆம் ஆண்டு விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக அவரது தந்தை தெரிவித்தார். இது தொடர்பான அறிவிப்பையும் எஸ்ஏ சந்திரசேகர் வெளியிட்டார்.

 

- Advertisement -

இதில் சிறிதும் உடன்படாத விஜய் தனது தந்தையின் அறிவிப்புக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதனால் தந்தைக்கு மகனுக்கும் இடையே அப்போதே ஒரு மிகப்பெரிய உரசல் ஏற்பட்டது. இந்த சூழலில், தனது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார் விஜய்.

 

தமிழக வெற்றிக் கழகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியிட்ட விஜய், தனது பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிடாமல் விஜய் என்றே எழுதி இருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும் விஜய் கூறியிருந்தார்.

 

அரசியலில் வருவதற்கு முன்பு அவர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்ததை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த வகையில், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தற்போதும் அதே போன்ற நிகழ்ச்சியை அவர் அறிவித்திருக்கிறார்.

 

இந்த முறை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வர்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு தேதிகளில் விழாவை நடத்த விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் விஜய், பெற்றோர் முன்னிலையில் மாணவர்களுக்கு சான்றிதழையும் ஊக்கத்தொகையும் வழங்குவார் என்று தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். கடந்த முறை, ஒரு நாள் முழுக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு வரை தொடர்ந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நின்று கொண்டே மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த முறை நேரத்தை சரியாக வகுத்து, இரண்டு கட்டங்களாக நிகழ்ச்சியை பிரித்து உள்ளார்கள்.

- Advertisement -

சற்று முன்