நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். லியோ தி கோட் படங்களை தொடர்ந்து இப்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைய உள்ளது. இதில் பீஸ்ட் படத்துக்கு பிறகு பூஜா ஹெக்டே மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல இயக்குனராக இருப்பவர் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த பகவந் கேசரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடிகர் வெங்கடேஷ் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சங்கராந்தி வஸ்துனம் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், காமெடி நடிகர் விடிவி கணேஷ் சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக ஒரு தகவலை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் விஜய் பகவத் கேசரி படத்தை ஐந்து முறை பார்த்திருக்கிறார்.
அதன்பின் அந்தப் படத்தின் இயக்குனரான அனில் ரவிபுடியை அழைத்து தன்னுடைய கடைசி படமாக பகவந்த் கேசரி படத்தை அனில் ரவிபுடி ரீமேக் செய்து இயக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் ரீமேக் படத்தை இயக்க முடியாது என அணில் ரவிபிடி விஜய்யின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் என்று நடிகர் வி டிவி கணேஷ் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதற்கு பின் பேசிய இயக்குனர் அனில் ரவிபுடி விஜய் சாரின் கடைசி படம் பகவந் கேசரி படத்தின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த இடத்தில் பேசுவது என்பது சரியல்ல. விஜய் சார் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது.
அந்த படத்தை இயக்க முடியாமல் போனதற்கு நேரம்தான் காரணம். கடைசி படம் குறித்து பேசியது வேறு, அங்கு நடந்தது வேறு. தளபதி 69 படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறி இருக்கிறார். இதன்மூலம் விஜயின் கடைசி படத்தை இவர் இயக்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்தது உறுதியாகி விட்டது. இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





