- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படம்... மாதவன் நயன்தாரா...

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படம்… மாதவன் நயன்தாரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களே அதில் நடித்திருக்கிறார்களா…

- Advertisement -

கொரோனா தொற்று சமயத்தில்தான் ஓடிடி தளம் என்பதே உலகம் முழுவதும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கைகள் காற்று வாங்கிய சமயத்தில், புதிய திரைப்படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வந்தனர். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஓடிடி நிறுவனம், ஒவ்வொரு படங்களையும் கூடுதல் தொகைக்கு விலைக்கு வாங்கி அதனை ஒளிபரப்ப தொடங்கியது.

தமிழ் சினிமாவில் இருந்து முதன்முதலில் சென்றது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் தான். சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம், நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் பிறகு சிறிய பட்ஜெட் படங்கள் பரவலாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்தன.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் சூரரைப் போற்று ஜெய்பீம் மகான் உள்ளிட்ட பெரிய படங்களும் இதில் வெளியாகின. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம், ஓடிடி யில் லாபம் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அதில் ரிலீஸ் செய்யவே முனைப்பு காட்டி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காலம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்த நிலையில், திரையரங்குகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு புதிய படங்கள் திரையிடப்பட ஆரம்பித்தன. பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வந்ததும் வழக்கம்போல் ரசிகர்களும் படையெடுக்கத் தொடங்கினர்.

இதனால் ஓடிடியில் நேரடியாக திரைப்படங்கள் வெளியாவது என்பது தற்போது குறைந்துவிட்டது. ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் தான் ஒரு திரைப்படம் ஓடிடிக்கு செல்கிறது. மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் முதலில் ஹாட்ஸ்டாரில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அது திரையரங்கு மெட்டீரியலாக மாறியது.

இப்படியான சூழலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு திரைப்படம் நேரடியாக netflix ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் நயன்தாரா சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் டெஸ்ட் திரைப்படம் தான் இந்த பட்டியலில் சேர்ந்து இருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பாடகியான சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்