- Advertisement -
Homeபொழுதுபோக்குபவுனுத்தாயி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நின்ற நடிகை ராதிகா சரத்குமார் - 2 வாரங்களில் தாய்கிழவி...

பவுனுத்தாயி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நின்ற நடிகை ராதிகா சரத்குமார் – 2 வாரங்களில் தாய்கிழவி செய்த வசூல் எவ்வளவு?

- Advertisement -

ஒரு நல்ல திரைப்படம் தனக்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும் என்று சினிமா விமர்சகர்கள் எப்போதுமே சொல்வது வழக்கம். அப்படிதான் சில படங்கள் பெரிய வெற்றியை பெறுகின்றன. அதற்கு காரணம் படத்தின் கதைக்களமும் அதில் வரும் சிறந்த கேரக்டர்களும்தான். அந்த வகையில் பல படங்கள் தமிழில் ஜெயித்திருக்கின்றன.

குறிப்பாக தமிழ் சினிமா கடந்த 10 15 ஆண்டுகளாக ஹீரோயிசம் என்ற வலைக்குள் சிக்கியிருக்கிறது. கதைக்காக படம் செய்யாமல் ஹீரோவுக்காக படம் செய்யும் இயக்குனர்களால் தமிழ் சினிமாவின் தரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. வன்முறை ஆபாசம் மட்டுமே தமிழ் சினிமா என்ற அடையாளத்தை அவர்கள் உருவாக்கி விட்டனர்.

- Advertisement -

ஆனால் அதற்கு மாறாக அவ்வப்போது சில நல்ல படங்களும் தமிழில் வந்து ரசிகர்களின் மனநிலையை ரிலாக்ஸ் செய்து வருகின்றன. அந்த வரிசையில் காக்கா முட்டை குட்நைட் குடும்பஸ்தன் லப்பர் பந்து பார்க்கிங் டூரிஸ்ட் ஃபேமிலி சிறை டிடிடி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இப்போது அந்த லிஸ்ட்டில் தாய்கிழவி படமும் இணைந்து விட்டது.

தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா சரத்குமார் எந்த மாதிரியாக கேரக்டர் என்றாலும் அதில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த பெண் கலைஞர். பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டு பட்டவர். அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர். எல்லா ஹீரோக்களும் ஜோடியாக 1980 90களில் நடித்தவர்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் தாய்கிழவி. இந்த படத்தில் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் மூதாட்டியாக ராதிகா நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அந்த காட்சிகளிலும் நடிப்பில் அதிரிபுதிரி காட்டி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியான தாய்கிழவி படம் கடந்த 14 நாட்களில் அதாவது 14 நாட்களில் மொத்தம் 60 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இப்படி ஒரு அபார வசூலை குவித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் கதைநாயகியாக நடித்த ராதிகாவுக்கு லாபத்தில் பங்கு தரவும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்