- Advertisement -
Homeபொழுதுபோக்கு18 நாட்களில் தாய்கிழவி நடத்திய வசூல் வேட்டை… கந்து வட்டி கேரக்டராக நிஜத்திலும் தாய்கிழவி பட்டைய...

18 நாட்களில் தாய்கிழவி நடத்திய வசூல் வேட்டை… கந்து வட்டி கேரக்டராக நிஜத்திலும் தாய்கிழவி பட்டைய கிளப்புகிறாரே? வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களின் எண்ணிக்கை என்பது வெகுவாக குறைந்து விட்டது. முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அந்த படங்களில் கதை என்பதே இருப்பதில்லை. ஹீரோயிசம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஹீரோவை கொம்பனாக காட்டும் கதைக்களமே படமாக உள்ளது.

இதுபோன்ற படங்களை பார்து பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் நொந்து போய்விட்டனர். எத்தனை நாட்களுக்கு தான் 100 பேரை அடித்து துவம்சம் செய்யும் ஹீரோவின் வீரத்தை ரசிப்பது? எத்தனை நாட்களுக்கு தான் ஹீரோ வில்லன் கேங்ஸ்டர் மோதலை பார்த்து தொலைப்பது என்று வாய்விட்டே புலம்பத் துவங்கி விட்டனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தான் காக்கா முட்டை லப்பர் பந்து பார்க்கிங் குட்நைட் குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் சிறை போன்ற இயல்பான திரைக்கதை கொண்ட கதைக்களத்தில் உருவான படங்கள் வெளியான ரசிகர்களின் மனங்களை ரிலாக்ஸ் செய்கின்றன. இந்த படங்கள் கதைக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படங்களாகவும் இருந்ததால் பெரிய வெற்றியை பெற்றன.

அந்த வரிசையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் தாய்கிழவி. அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி என்ற கந்து வட்டி வசூலிக்கும் பாட்டி கேரக்டரில் நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை ஆதரவை பெற்றுள்ளது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் சொந்தமாக தயாரித்த இந்த படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியான நிலையில் தாய்கிழவிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. குறிப்பாக முனீஸ்காந்த் அருள்தாஸ் பால சரவணன் சிங்கம்புலி இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக உள்ளனர்.

இந்நிலையில் தாய்கிழவி படம் வெளியாகி 18 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 71.8 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாகஸ் ஆபீஸ் நிலவரம் தெரிவிக்கிறது. படத்துக்கு இன்னும் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் எப்படியும் ரூ. 100 கோடி வசூல் லிஸ்ட்டில் தாய்கிழவி வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் தாய்கிழவி கந்து வட்டி வசூலிப்பதை போல நிஜத்திலும் படம் வசூலில் பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்