நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக வலம் வருபவர். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் தன் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதிப்பவர். குறிப்பாக 1980 90களில் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
சினிமா நடிகராக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராகவும் சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் சித்தி அண்ணாமலை வாணி ராணி போன்ற டிவி சீரியல்களிலும் ராதிகா சரத்குமார் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக நடிகை ராதிகா சரத்குமார் பெரும்பாலான படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய்கிழவி என்ற படத்தில் பவுனுத்தாயி என்ற தாய்கிழவி கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளிலேயே 12.5 கோடி ரூபாய் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கந்து வட்டி வசூலிக்கும் அடாவடியான உசிலம்பட்டி கிழவியாக ராதிகா சரத்குமார் அட்டகாசமாக நடித்திருந்தார். குறிப்பாக அவரது கெட்டப்பும் மேக்கப்பும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
மேலும் தாய்கிழவி படத்தில் ராதிகா சரத்குமாருடன் பாலசரவணன் அருள்தாஸ் சிங்கம்புலி ஜார்ஜ் மரியம் இளவரசு போன்றவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ராதிகா சரத்குமாருக்கு நிச்சயமாக பல அமைப்புகளிடம் இருந்து விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த மாதம் 27ம் தேதி வெளியான தாய்கிழவி படம் இதுவரை 75 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியிருக்கிறது. ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 10 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கிடையே தாய்கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. வருகிற 26ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தாய்கிழவி படம் ரிலீஸாகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





