- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்துல தல வருகிறாரா? அவரை விஜயே தல என அழைக்கிறாரா? என்னப்பா இது பெரிய...

ஜனநாயகன் படத்துல தல வருகிறாரா? அவரை விஜயே தல என அழைக்கிறாரா? என்னப்பா இது பெரிய டிவிஸ்ட்டா இருக்குதே?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் 3 நாட்களில் திரைகளுக்கு வர இருக்கிறது. தளபதி ரசிகர்கள் ஜனநாயகன் வருகையை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இந்த படத்துக்கு இந்த நிமிடம் வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்று நடந்தும் வருகிறது.

இதற்கிடையே ஜனநாயகன் படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தல ஒரு காட்சியில் வருகிறார் என்கிறார்கள். அதாவது சினிமா உலகில் தல என்றால் அது அஜீத்குமார் தான். கிரிக்கெட்டில் தல என்றால் அது மகேந்திர சிங் தோனிதான்.

விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக இருக்கிறார். அரசியல் களத்தில் அவர் தீவிரமாக இருந்து வருவதால் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்ற நிலையில் இந்த படத்தில் தல வருவது உறுதியாகி விட்டது. இதுவரை சினிமாவில் போட்டியாளராக இருந்த அஜீத்குமார் இந்த படத்தில் வருகிறாரா என்பது தளபதி ரசிகர்களுக்கும் ஏகே ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.

ஆனால் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் போல ஜனநாயகன் படத்தில் வரப்போவது தல அஜீத்குமாரும் அல்ல, தல மகேந்திர சிங் தோனியும் அல்ல. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் அந்த தல. தலைவா என்பதை தான் நடிகர் விஜய் இந்த படத்தில் தல என்று அவரை அழைப்பது போன்ற காட்சி வருகிறது.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் இளங்கோ என்ற கேரக்டரில் எம்ஜிஆர் சவுக்கை வீசி நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று பாடுவார். அதுபோன்ற ஒரு பாடல் காட்சி ஜனநாயகன் படத்திலும் வருகிறது. ஆனால் அந்த பாடலை விஜயே பாடியபடி தல என்று எம்ஜிஆர் புகைப்படத்தை பார்த்து அழைக்கிறார்.

அதன்பிறகு கையில் சவுக்கை எடுத்து அங்கு இருப்பவர்களை எல்லாம் அடித்து விளாசுகிறார். சட்டசபை தேர்தல் நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதால் எம்ஜிஆர் ரசிகர்களையும் அதிமுக தொண்டர்களையும் கவரும் விதமாக ஜனநாயகன் படத்தில் இப்படி ஒரு காட்சியை தவெக தலைவர் விஜய் கொண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்