வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு மாஸ்டர்கள் இதில் சண்டை பயிற்சியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதை படபிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பிரீ ப்ரொடக்சன் வேலைகளில் லோகேஷ் ஈடுபட்டார். தான் இயக்கிய திரைப்படங்களிலேயே இதற்கு தான் அதிக நேரம் செலவழித்து இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
தனது முந்தைய திரைப்படங்கள் இல்லாமல் சோதனை முயற்சியில் இந்த படத்தை அவர் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம் இந்த திரைப்படம் நிச்சயம் எல் சி யு வில் இடம்பெறாது என்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் படத்திற்கு உண்டான போதை வஸ்துகள் இதில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் ஒன்லைனை லோகேஷ் கூறிய உடனேயே, அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார் ரஜினிகாந்த். அது மட்டுமல்லாமல் மாதத்திற்கு இரு முறை செல்போனில் தொடர்பு கொண்டு கதையின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் கேட்டறிந்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் சமீபத்தில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் படத்திற்கான முதல் போஸ்டர் வெளியானது. அதில் தனது இரண்டு கைகளும் வாட்ச் அணிந்து கொண்டு, வாட்சுகளினாலே கை கொடுக்கப்பட்டது போன்று புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் ரஜினி சிரித்துக் கொண்டவாறு போஸ் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் படத்தில் தங்கத்தை கடத்தும் நபராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல படத்தின் டைட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படியான சூழலில் படத்தின் பெயர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதற்கு ஈகிள் என லோகேஷ் கனகராஜ் தலைப்பு வைத்துள்ளாராம். ஏற்கனவே ரஜினி நடிப்பில் கழுகு என்ற திரைப்படம் வெளியாகி இருந்த சூழலில், அதன் ஆங்கில பெயரான ஈகிள், சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படத்திற்கு வைக்கப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





