- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய் கூறியதாவது, நடிப்பு என்பது மற்ற எல்லா தொழிலையும் விடவும் கஷ்டமானது. எனக்கு ஒரு கேரக்டர் பிடித்து விட்டால் அதற்குள் ஆவி மாதிரி உள்ளே ஆழ்ந்து போய்விட முயற்சி செய்வேன். ரிசார்ட் நெடுமாறன் கேரக்டர் கூட அப்படிப்பட்டது தான். அதில் என் சொந்த ஆளுமை கலந்திருக்கிறது. நடிப்பை லைட்டாக எடுத்துக்கொண்டு கூட செய்யலாம். ஆனால் என் உழைப்பையும் சரிவிகிதத்தில் போட்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஒவ்வொரு கேரக்டரிலும் ஈடுபாடு வைக்கிறேன் பாருங்கள். அதுதான் எனக்கு இன்றைக்கு வரைக்கும் சோறு போடுகிறது என்று தலைவாசல் விஜய் கூறி இருக்கிறார்





