- Advertisement -
Homeபொழுதுபோக்குநீ சிங்கம்தான்... தளபதி 68-க்கு இன்னும் சூட்டிங்கே போகல, அதுக்குள்ளேயும் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல...

நீ சிங்கம்தான்… தளபதி 68-க்கு இன்னும் சூட்டிங்கே போகல, அதுக்குள்ளேயும் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எத்தனை கோடிகள் தெரியுமா?…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, லியோ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்திருக்கும் இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜ் ஏற்படுத்தி இருந்த என் சி யு வின் தாக்கம், இந்த திரைப்படத்திலும் தொடருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருப்பதால், உச்சபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தளபதி விஜயின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து விஜய் – யுவன் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இதில் வயதான விஜய்க்கு ஜோதிகா ஜோடி போடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் ஜோதிகா மறுத்து விட்டதால், சிம்ரன் அல்லது சினேகா விஜய்யுடன் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இளைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறாராம்.

- Advertisement -

இது போக விஜய்யின் தம்பியாக ஜெய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜயின் தோற்றத்தை புதுமையாக காட்டுவதற்காக, விஜய் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலிபோர்னியாவுக்கு சென்றனர். அங்கு 3டி தொழில்நுட்பத்தில் விஜயின் தோற்றத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. இதன் பிறகு சென்னைக்கு திரும்பிய விஜய், அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுக்கும் தனது தந்தையை நேரில் சென்று பார்த்தார்.

விஜய் 68 வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஷூட்டிங் ஆரம்பமாவதற்கு முன்னாலேயே நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறது. இதேபோல், டி சீரிஸ் நிறுவனம் ஆடியோ உரிமத்தை இப்போதே பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யம் செய்து வரும் விஜய்யின் அடுத்த படம், கோடிக்கணக்கான ரூபாய்க்கு உரிமம் போய் இருப்பது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்