- Advertisement -
Homeபொழுதுபோக்குஒருவழியாக வந்தது தளபதி 68 அப்டேட்.. லியோ பாலிசிதான் இதற்கும்.. முழு விவரம் உள்ளே

ஒருவழியாக வந்தது தளபதி 68 அப்டேட்.. லியோ பாலிசிதான் இதற்கும்.. முழு விவரம் உள்ளே

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். லியோ படம் கண்டிப்பாக பிரமாண்ட வெற்றியடையும் என அவரது ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் பலத்த வரவேற்பை பெற்றன. அதேபோல் படத்தின் இரண்டு சிங்கிள்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கின்றது.

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைந்திருப்பதால் அஜித்துக்கு எப்படி வெங்கட் பிரபு ஒரு மங்காத்தா கொடுத்தாரோ அதேபோல் இந்தப் படத்தையும் மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்று தளபதி ரசிகர்கள் விரும்புகின்றனர். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்தப் படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பே நடக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் லியோ பணிகள் போய்க்கொண்டிருக்கும்போதே இப்படத்துக்கு பூஜை போட்டால் அது லியோ மீதான கவனத்தை குறைத்துவிடுமோ என்று யோசித்த படக்குழு பூஜையை தள்ளி வைத்தது. அந்த கேப்பில் திரைக்கதையை செதுக்கும் பணியில் தனது குழுவினருடன் வெங்கட் பிரபு இறங்கியிருந்தார்.

மேலும் விஜய்யை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்ற அவர் அங்கு விஜய்யின் உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்ய வைத்தார். இந்த சூழலில் படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார் என்ற் தகவலும் கசிந்தது. அதன்படி விஜய்யுடன் பிரபுதேவா, லைலா, பிரசாந்த், ஜெய் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகை மீனாட்சியும் இதில் இணைந்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இன்று எளிமையாக நடந்தது. லியோ படம் போலவே இந்தப் படத்தின் பூஜைக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட வெளியாட்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் இதில் பிரபுதேவா, லைலா, மீனாட்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இன்று பூஜை போடப்பட்டிருக்கும் சூழலில் நாளை முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறதாம். அதன்படி முதலில் பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் வெங்கட் பிரபு. அது ஏஐ (AI)டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் சில நாட்கள் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூலை வெளிநாட்டில் வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்