- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 திரைப்படத்திற்கு இந்த பெயர் தானா... கேட்கவே செம மாஸா இருக்கேப்பா...

தளபதி 68 திரைப்படத்திற்கு இந்த பெயர் தானா… கேட்கவே செம மாஸா இருக்கேப்பா…

- Advertisement -

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்திருக்கிறார் தளபதி விஜய். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. இதனால் நிச்சயம் விஜய் உடனான படத்தில் அவர் சொதப்ப மாட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதே போல் படத்திற்கான அறிவிப்பு வெளியானதும், அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார் வெங்கட் பிரபு.

- Advertisement -

இதற்காக வெங்கட் பிரபு, விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கலிபோர்னியா நகருக்கு சென்றனர். அங்கு 3டி டெக்னாலஜியின் மூலம் டி ஏஜிங் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை இவர்கள் பார்வையிட்டனர். படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும், அதில் விஜய்யை இளமையான தோற்றத்தில் காண்பிக்கதற்காகவும் இந்த தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தளபதி 68 படத்திற்கான சூட்டிங் பணிகள் தொடங்கின. இதில் விஜயுடன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், இவானா, யுகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதற்கான சூட்டிங் டெல்லியில் தொடங்கியது.

- Advertisement -

அங்கு முதலாவதாக பாடல் ஒன்றை வெங்கட் பிரபு படமாக்கினார். இதன் பிறகு தாய்லாந்து நாட்டில் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டன. இதில் கார் சேஸிங் காட்சி நடைபெற்றதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருந்தார். பின்னர் துருக்கி நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பு இப்போது, ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம், டைம் டிராவல் முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம். எதிர்காலத்தில் இருக்கும் விஜய், தற்போது இருக்கும் விஜயை சந்திக்கும் நிகழ்வு தான் படத்தின் கதைக்கரு என்று கூறப்படுகிறது. இது திரைப்படத்திற்கான டைட்டிலை வரும் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளதாம். முதலில் இந்த திரைப்படத்திற்கு சிஎஸ்கே என டைட்டில் வைத்திருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. இப்போது அது இல்லை என்றும் படத்திற்கு பாஸ் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. பாஸ் பெயர் நன்றாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்