நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தி கோட் படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருந்தார். பிரசாந்த் பிரபுதேவா ஜெயராம் அஜ்மல் மைக் மோகன் சினேகா மீனாட்சி சௌத்ரி லைலா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் 445 கோடி ரூபாய் வசூலித்து, முதலிடத்தை பிடித்தது தி கோட் படம்தான். அடுத்து ரூ. 325 கோடி வசூலித்து அமரன் படம் 2ம் இடமும், ரூ. 265 கோடி வசூலித்து வேட்டையன் படம் 3ம் இடமும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் 70வது படத்தில் நடிக்க ஓகே சொன்னதால் இந்த படம், தற்போது 2ம் பாகமாக வெளிவர வாய்ப்பு உருவாகி உள்ளது.
தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், தனது 69வது படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி அபிராமி கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பாபி தியோல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் வரும் பிப்ரவரி இறுதிக்குள் முடிந்து விடும் என்றும், படத்தின் மொத்த காட்சிகளுக்கான படப்பிடிப்பும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. தீபாவளி கிறிஸ்துமஸ் பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகை சிறப்பு நாட்களில் தளபதி 69 பட அப்டேட்டை எதிர்பார்த்த ரசிகர்கள், பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த படம் அக்டோபரில்தான் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், படம் குறித்த தகவல்களை இப்போதே வெளியிட்டால் படத்தின் மீதான சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் எந்த அப்டேட்டும் இப்போதைக்கு வேண்டாம் என இயக்குனர் எச் வினோத் முடிவு செய்திருக்கிறார். மேலும் இது தெலுங்கு படம் பகவந் கேசரியின் ரீமேக் என்பதாலும், படக்காட்சி புகைப்படங்கள் வெளியானால், இணையத்தில் இன்னும் வைரலாகி படம் குறித்த எதிர்மறை விமர்சனத்தை அதிகரிக்கும் என்பதும் முக்கிய காரணமாக உள்ளது.





