நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், இவானா, யோகி பாபு, வி டிவி கணேஷ், வைபவ், அஜ்மல், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. அறிவியல் சார்ந்த திரைப்படமாக இது உருவாகிறது.
இந்த சூழலில் திரைப்படங்களுக்கு நடுவே அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். அதிகாரப்பூர்வமாக இன்னும் அரசியல் கட்சி அவர் ஆரம்பிக்கவில்லை என்றாலும், தனது தளபதி மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் தனி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இப்படி இருக்க, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நற்பணிகளை அவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாவட்டங்கள் வாரியாக முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசுகளை வழங்கினார். காலை முதல் இரவு வரை அவர் ஒரே இடத்தில் நின்று கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். இதற்காக திருநெல்வேலி சென்ற நடிகர் விஜய், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், வீடுகளை இழந்தவர்களுக்கு உதவி தொகை போன்றவற்றை வழங்கி விட்டுச் சென்றார். வெள்ளம் சமயத்தின் போது, தனது தளபதி மக்கள் இயக்கத்தினரும் களத்தில் இறங்கி பணியாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இப்படியான சூழலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது விஜயகாந்த் உடலை வைத்திருந்தபோது, சென்ற விஜய் நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் காலனியை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் மீது காலணி அறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தென் சென்னை மாவட்ட தளபதி மக்கள் இயக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோயம்பேடு காவல் ஆணையருக்கு அவர்கள் எழுதியுள்ள புகார் கடிதத்தில், விஜயை நோக்கி ஒருவர் காலணியை கழற்றி எரிந்ததால், அவரது ரசிகர்கள், சொந்தங்கள், அவர் மீது பாசம் வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களும் புண்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட வரை கண்டுபிடித்து, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் அரசியலில் கட்டுப்பாடு தான் அடிப்படை ஒன்று. அது கூட தெரியாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் எப்படி ஆர்வக்கோளாறாக இருக்கிறார்களே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





