- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சர்ச்சை நடிகர் குறித்து பதிவு வெளியிட்ட நடிகர் பார்த்திபன் - வழக்கம்போல என்னவோ...

அந்த சர்ச்சை நடிகர் குறித்து பதிவு வெளியிட்ட நடிகர் பார்த்திபன் – வழக்கம்போல என்னவோ சொல்ல வந்திருக்காரு, ஆனா சொன்னாரான்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இப்போதும் அவரது இயக்கத்தில் படங்கள் வருகின்றன. அவரும் வித்யாசமாய், புதுமையாய் ஏதேதோ செய்தாலும், அவரது சினிமா பயணம் புதிய பாதைக்கு திரும்பவே இல்லை. பழையபடியே தான் இருக்கிறது.

நடிகர் பாக்யராஜின் சிஷ்யரான பார்த்திபன், பல படங்களில் நல்ல நடிகராக நடித்திருக்கிறார். தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜி கணேசனுடன் நடிக்கும் அரிய வாய்ப்பை, இயக்குநர் பாக்யராஜ் அவருக்கு தந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த பார்த்திபன், பொண்டாட்டி தேவை போன்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தையும் இயக்கினார். உள்ளே வெளியே போன்ற ஆபாச படத்தையும் இயக்கினார்.

- Advertisement -

புதிய பாதை படத்தில் நடித்த போது, நடிகை சீதாவுடன் காதல் ஏற்பட்டு அவடர கரம்பிடித்தார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அவரை நடிக்க அனுமதிக்கவில்லை. எனினும் குடும்ப பாசத்தில், கணவர் விரும்பிய மனைவியாக சீதா வாழ்ந்தார். ஒரு கட்டத்தில், பார்த்திபன் டார்ச்சர் தாங்க முடியாமல் அவரை சீதா பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்போதும் ஒத்த செருப்பு, இரவின் நிழலில் போன்ற வித்யாசமான முயற்சிகளை தொடர்ந்துக்கொண்டுதான் பார்த்திபன் இருக்கிறார். ஆனால், அவரது படைப்புகளை பெரிய அளவில் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவது இல்லை. எனினும் அவரிடம் இருந்து சில நல்ல படைப்புகள் வருகின்றன என்பதை மறுக்க முடியாது.

- Advertisement -

சமீபத்தில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் கலைஞர் 100 விழா நடந்தது. இதில் நடிகர் பார்த்திபன் கலந்துக்கொண்டார். நடிகர் வடிவேலுவும் பங்கேற்றார். பார்த்திபன் – வடிவேலு கூட்டணி காமெடி, கவுண்டமணி – செந்தில் காமெடி போன்றே மிக பிரபலமானது, ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பது. அதற்கு உதாரணமாக வெற்றிக்கொடி கட்டு, பாரதி கண்ணம்மா படங்களை சொல்லலாம்.

விஜயகாந்த் மறைவின் போது கடுமையான சர்ச்சையில் சிக்கியவர் வடிவேலு. பார்த்திபன் இந்த சந்திப்பின் போது வடிவேலுவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்தால், என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம்… விரைவில் வந்தால். இல்லாவிட்டாலும் பார்க்கலாம், எப்போது வந்தாலும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு குழப்பமான பதிவு அவசியம்தானா என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்