- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய்... அஜித்தை தொடர்ந்து தளபதி பின்பற்றும் வழி...

பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய்… அஜித்தை தொடர்ந்து தளபதி பின்பற்றும் வழி…

- Advertisement -

லியோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுருக்கி கோட் என்று அழைக்கிறார்கள். திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன் நிறுவனம் தயாரிக்கிறது.

புதிய கீதைக்கு பிறகு கோட் படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இதன் படப்பிடிப்பு, சென்னை தாய்லாந்து துருக்கி புதுச்சேரி கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. முக்கியமாக திருவனந்தபுரத்தில் சூட்டிங் நடைபெற்ற போது, விஜயை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். டைம் டிராவலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் இருக்கும் விஜய் நிகழ்காலத்தில் வரும் விஜய் சந்திப்பது போல் காட்சிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் மாபெரும் நடிகர் பட்டாளத்தையே இறக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.

சினேகாவில் தொடங்கி பிரபுதேவா பிரசாந்த் லைலா மோகன் மீனாட்சி சௌத்ரி பிரேம்ஜி அமரன் வைபவ் அஜ்மல் ஜெயராம் வி டிவி கணேஷ் யோகி பாபு உள்பட ஏராளமானோர் நடிக்கிறார்கள். இதுபோக ஒரு பாடலுக்கு திரிசா நடனமாடி இருக்கிறார். அந்த பாடலை விஜய் தான் பாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்து ஒரு படம், அதனை அடித்து சினிமாவுக்கு முழுக்கு என்று விஜய் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக கோட் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனை வெங்கட் பிரபு பூர்த்தி செய்வார் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்குகிறது. இப்படியான சூழலில் நடிகர் விஜய், சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த காட்சி வெளியாகியிருக்கிறது. கோயிலில் சாமியாருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தின் வைரல் ஆகி வருகிறது. தான் எதை செய்தாலும், முதலில் சாய்பாபாவை வணங்கி விட்டு தான் அஜித் இறங்குவார். அவர் சாய்பாபா கோயிலுக்கு சென்ற காட்சிகளும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது விஜயும் சாய்பாபா கோயிலுக்கு சென்று இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்