- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலான் நடிகையின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட முக்கியமான போஸ்டர்... அடித்து தூள் கிளப்ப...

தங்கலான் நடிகையின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட முக்கியமான போஸ்டர்… அடித்து தூள் கிளப்ப தயாராகும் நடிகை…

- Advertisement -

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் தற்போது எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக இருப்பது தங்கலான். பா ரஞ்சித் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், விக்ரம், மலையாள நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில், கோலார் தங்க வயல் சுரங்கப் பகுதியில் இருந்த அடிமைத்தனத்தையும், அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிய ஒரு தலைவன் குறித்தும் இந்தத் திரைப்படம் பேசுகிறது. இந்த திரைப்படத்திற்காக விக்ரமின் தோற்றம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

அடர்ந்த தாடி, பாதி வழுக்கை தலை, கையில் தடி என மிரட்டலான லுக்கில் விக்ரம் இருந்தார். சமீபத்தில் வெளியான இதன் டீசரும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் பார்வையாளரை அசர வைத்தன.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவடைந்திருக்கும் சூழலில், போஸ்ட் ப்ரடக்சன் வேலைகளை பா ரஞ்சித் தீவிரப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சிஜி பணிகள் அதிகம் இருப்பதால், பட குழு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

அனேகமாக, ஜூன் அல்லது ஜூலை மாதம் தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில், பார்வதியின் கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்று பலரும் இப்போதே கேள்வி எழுப்பி வருகின்றனர். மலையாள நடிகையான இவர் தமிழில் கதைகளை தேர்ந்தெடுத்தே நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக இயக்குனர் சசியின் பூ படத்தில் அவர் நடித்திருந்தார். இல்லை மாரியாக அவர் வாழ்ந்திருந்தார் என்றே கூற வேண்டும். இதன்பிறகு, மரியான் படத்தில் பேசப்பட்டார். இப்படியான சூழலில் தான் பா ரஞ்சித்துடன் பார்வதி கைகோர்த்து இருக்கிறார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் கங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்