- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டிங் நடிகை கடித்து வைத்த ஆப்பிள் திடீர் மாயம்; இதையடுத்து அங்கு நடந்த தரமான...

ஷூட்டிங் ஸ்பாட்டிங் நடிகை கடித்து வைத்த ஆப்பிள் திடீர் மாயம்; இதையடுத்து அங்கு நடந்த தரமான சம்பவம்

- Advertisement -

சினிமா நடிகர்களில் சிலரது புகழ் பெருமை என்றுமே குறையாது, மறையாது. அதில் முதன்மையானவர்கள் எம்.ஜிஆர். சிவாஜி. அதுபோல் மறைந்து போன சில நடிகைகளும் இப்போதும் பேசப்படுகின்றனர். அவர்கள் நடித்த படங்களும் ரசிக்கப்படுகின்றன. ஆனால், இளம் வயதிலேயே இந்த நடிகைக்கு இப்போதும் செம மாஸ் என்றால், அது மிகையல்ல. சமீபத்தில் வந்த மார்க் ஆண்டனி படத்தில் கூட, இவரது முக சாயலில் இருந்த புது நடிகையை பார்த்தவுடன், தியேட்டர்களில் விசில் சத்தம் காதை பிளந்தது.

ஆந்திராவில் இருந்து, நடிகர் வினுசக்ரவர்த்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தவர்தான் சில்க் ஸ்மிதா. வினுசக்ரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படத்தில், சில்க் என்ற கேரக்டரில் நடித்ததால், விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டவர் சில்க் ஸ்மிதா வாக மாறினார்.

- Advertisement -

சில்க் ஸ்மிதாவின் காந்த கண் அழகும், நடனமும், கவர்ச்சியான தோற்றமும், நடிப்பும் எளிதில் ரசிகர்களை வசப்படுத்தியது, கடந்த 80,90 களில், எந்த ஹீரோ படம் என்றாலும், அதில் சில்க் ஸ்மிதாவின் நடனம் வேண்டும் என அடம்பிடித்த விநியோகஸ்தர்கள் உண்டு. அந்த அளவுக்கு, ஹீரோக்களுக்கு இணையாக பிரபலமாக பேசப்பட்டவர் சில்க் ஸ்மிதா.

அவர் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று, இப்போது வைரலாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில், உணவு இடைவேளை நேரத்தில், ஓய்வாக அமர்ந்திருந்த சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை எடுத்து கடித்துவிட்டு வைத்திருக்கிறார். அடுத்த சில விநாடிகளில், அந்த ஆப்பிளை காணவில்லை. அங்கிருந்த யாரோ ஒரு நபர், சில்க் கடித்த ஆப்பிள் என்று எடுத்துக்கொண்டு மாயமாகி விட்டார்.

- Advertisement -

இதையடுத்து, அங்கிருந்தவர்களுக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது. சில்க் ஸ்மிதா கடித்த ஒரு ஆப்பிளை, படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து ஏலம் விட்டு இருக்கின்றனர். ஆப்பிள் கிலோ ரூ. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்த காலகட்டத்திலேயே சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள், 200 ரூபாய் வரை ஏலம் போயிருக்கிறது. இப்போதாக இருந்தால், 2 கோடிரூபாய்க்கு கூட ஏலம் போயிருக்கலாம்.

தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, இளம்வயதிலேயே குடும்ப பிரச்னைகளால் தூக்கு போட்டு உயிரிழந்தார். அவர் மட்டும் இருந்திருந்தால், இப்போதும் அவரது அழகை, நடிப்பை, கவர்ச்சியை ரசிகர்கள் வரவேற்றுக்கொண்டு தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம்தான், சமீபத்தில் விஷால் – எஸ்.ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா போன்ற தோற்றமுள்ள நடிகைக்கு ரசிகர்கள் தந்த ஆரவாரமும், உற்சாகமும் என்றால், அது மிகையல்ல.

- Advertisement -

சற்று முன்