தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கானாவில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற அரசு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட படம் கில்லி மூலம் நடிகையாக அறிமுகமானவர். தடையறத் தாக்க படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அடுத்து கார்த்தியுடன் தீரன் அதிகாரம் 1, மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி போன்ற பிற மொழிகளிலும் பிரபல நடிகையாக அவர் இருந்து வருகிறார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் தனது திருமண நிகழ்ச்சியில் ஒரு சின்ன பட்டாசு கூட வெடிக்க கூடாது என்று அவர் கண்டிசன் போட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமண நிகழ்வில் பட்டாசு வெடிப்பது ஒரு சந்தோஷத்தின் வெளிப்பாடுதானே என்று பலரும் விமர்சித்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் ரகுல் ப்ரீத் சிங் அளித்த ஒரு நேர்காணலில், என் அப்பா ஒரு முறை தீபாவளி பண்டிகைக்கு என் கையில் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது அந்த 500 ரூபாய் நோட்டை தீயிட்டு கொளுத்துமாறு சொன்னார். நான் அப்படியே அதிர்ச்சியாகி விட்டேன். ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் என்று என் அப்பாவிடம் கேட்டேன்.
அதற்கு அவர், இதை தான் நீ இப்போது செய்யப் போகிறாய். பணம் கொடுத்து பட்டாசு வாங்கி அதை கொளுத்துகிறாய். இதனால் பணம் எரிந்து கரியாக தான் போகிறது. அந்த பணத்தில் சாக்லேட் வாங்கி யாருக்காவது கொடுக்கலாம் என்று என்னிடம் கூறினார். அப்போதில் இருந்து நான் பட்டாசு வெடிப்பதை விட்டு விட்டேன் என்று ரகுல் பிரீத் சிங் கூறியிருந்தார்.
அதே போல் 500 ரூபாய் நோட்டை என்னிடம் எரிக்கச் சொல்லி என் அப்பா என்னிடம் கொடுத்தார். ஏனென்றால் படம் பார்க்க தியேட்டருக்கு போக வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அப்படி செய்தால், உங்களுடைய சினிமா தொழில் என்ன ஆகும் என்று பலரும் கமெண்ட் செய்து, ரகுல் ப்ரீத் சிங்கை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர் இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





