இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் படங்களை தந்த ஒரு முக்கிய இளம் இயக்குநராக வலம் வருகிறார். மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்கப் போகிறார். இதில் அவரது நான்கு படங்களுமே வசூலை அள்ளிக் குவித்த படங்களாக இருக்கின்றன.
விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள லியோ படம் பாதி வரை மிகச் சிறப்பாக இருப்பதாகவும் மீதி படம் படு குழப்பமாக இருப்பதாகவும் ரசிகர்களின் பொதுவான விமர்சனமாக உள்ளது. இந்த படம் இடைவேளை வரை ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. மீதி படம், அவர்களது சொந்த திரைக்கதையில், மசாலா காட்சிகளுடன் எடுக்கப்பட்டது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் ரத்னக்குமார். இவரும் ஒரு இயக்குநர்தான். மேயாத மான், ஆடை, குலுகுலு ஆகிய மூன்று படங்களை இயக்கியவர். தவிர, மாஸ்டர், விக்ரம் படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர்தான். லியோ படத்துக்கு இணை எழுத்தாளராக, கதை எழுதியவர் இவர்தான்.
நல்லவேளையாக விக்ரம், மாஸ்டர் படங்களுக்கு இவர் வசனம் எழுதியோடு தனது பங்களிப்பை நிறுத்திவிட்டதால், அந்த படங்கள் லோகேஷ் கனகராஜ் படங்களாக இருந்தது. ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற வெற்றி படங்களாக அமைந்தது. ஆனால், லியோ படத்துக்கு ரத்னக்குமார்தான் இணை எழுத்தாளராக இருந்து, கதையை செதுக்கி இருக்கிறார் என்பதும், விஜய் – லோகேஷ் கனகராஜ் லடாய் காரணமாக, இடைவேளைக்கு பிறகு, ரத்னக்குமார்தான் லியோ படத்தின் இயக்குநராக செயல்பட்டதாகவும் தெரிகிறது.
இதை உறுதிபடுத்தும் விதமாக, ரத்னக்குமார் அளித்துள்ள நேர்காணல் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில், நானும், லோகேஷ் கனகராஜூம், ஆரம்ப காலத்தில் பழகிய நாட்களில் வாங்க, போங்க என மரியாதையாக பேசிக்கொள்வதால் இருவருக்கும் இடைவெளி அதிகமாகிறது. அதனால் வாடா, போடா மச்சி என ஜாலியாக பேசிக்கொள்ளலாம் என இருவரும் பேசி முடிவெடுத்தோம்.
அதேபோல் எதிர்காலத்தில் நாம் சினிமா எடுத்தால், என் படத்துக்கு நீ கதை எழுது, உன் படத்துக்கு நான் கதை எழுதுகிறேன் என இருவரும் ஒப்பந்தம் செய்துகொள்வது போல், பேசிக்கொண்டோம். அது நடக்கப் போகுதா, இல்லையா என அப்போது எங்களுக்கு தெரியாது என அதில் கூறியிருக்கிறார் ரத்னக்குமார். ஆனால், ரத்னக்குமாரின் ஆடை, குலுகுலு, மேயாத மான் ஆகிய 3 படங்களுக்கும் அவரேதான் கதை எழுதி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் கதையோ, வசனமோ எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது.





