- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படம் குறித்த அறிவிப்பு பொங்கல் நாளில் வெளியாகுமா? ஆவலாக காத்திருக்கும் அஜீத்குமார் ரசிகர்கள்...

ஏகே 64 படம் குறித்த அறிவிப்பு பொங்கல் நாளில் வெளியாகுமா? ஆவலாக காத்திருக்கும் அஜீத்குமார் ரசிகர்கள் – இதுக்கு சீமான் டயலாக்குதான் பதிலாம்!

- Advertisement -

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் அசின் நடித்த போக்கிரி. இந்த படத்தில் ஒரு காட்சியில் கராத்தே குங்ஃபூ மாஸ்டராக இருக்கும் நடிகர் வடிவேலுவை பார்த்து, அசினின் தம்பியாக வரும் சின்ன பையன் ஒரு டயலாக் சொல்வார். வெறும் பில்டப்புதான் பண்றார். ஆனா ஒண்ணத்தையும் செய்ய காணோம் என்பார். அந்த டயலாக் வடிவேலுவுக்கு பொருந்துவதை விட நடிகர் அஜீத்குமார் படத்துக்கு பொருந்துகிறது.

விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் தனது 64வது படத்தில் கடந்த ஆண்டிலேயே நடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கடந்தாண்டு முழுவதும் 12 மாதங்களும் வெளிநாட்டில் நடந்த கார் ரேஸ்களில் மட்டுமே முழு ஆர்வத்துடன் கலந்துக்கொண்டார். தனது அடுத்த படம் குறித்து அவர் சொன்ன ஒரே ஒரு விஷயம் தனது சம்பளம் ரூ. 186 கோடி என்பது மட்டும்தான். அதை குறைக்க முடியாது என்பதுதான்.

- Advertisement -

ஆனால் உண்மையில் அந்தளவுக்கு பெரிய சம்பளம் கொடுக்கும் அளவுக்கு அஜீத்குமார் நடிக்கும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லை. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என அவருக்கு சரியான வியாபாரமே இல்லாத நிலையில் அவரை வைத்து ரூ. 300 கோடி வரை செலவு செய்து படம் எடுத்து நஷ்மடைய எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.

அதைதான் திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனும் ஓபனாக கூறியிருந்தார். அஜீத்குமாருக்கு போட்டியும் இல்லை. வியாபாரமும் இல்லை. அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளரும் இல்லை என்று தனது கருத்தை அதாவது உண்மையை சொல்லியிருந்தார். உண்மையில் கார் ரேஸ் இல்லை என்றால் நடிகர் அஜீத்குமார் கடந்த ஓராண்டாக தயாரிப்பாளர் இல்லாமல் தனது 64வது படத்தை துவங்கவில்லை என்கிற உண்மை அவரது ரசிகர்களுக்கே தெரிந்திருக்கும்.

- Advertisement -

இந்த சூழலில் பொங்கல் பண்டிகை நாட்களில் அஜீத்குமாரின் 64வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வௌியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் என் சம்பளம் ரூ. 186 கோடி என்ற முடிவில் இருந்து அஜீத்குமார் சிறிதும் இறங்கி வராத நிலையில் அவரை வைத்து படம் எடுக்க இதுவரை எந்த தயாரிப்பாளரும் ஓகே சொல்லவில்லை.

அதனால் ஏகே 64 படத்தின் அறிவிப்பு இந்த பொங்கலுக்கு வெளிவருமா என்ற ஆவலாக காத்திருக்கும் ஏகே ரசிகர்களுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஸ்டைலில் சொன்னால் வாய்ப்பில்லே ராஜா என்பதுதான். அதனால் ரேஸில் இருப்பதாக அஜீத்குமார் இந்த ஆண்டு முழுவதும் காட்டிக் கொண்டாலும் அவரது அடுத்த படம் தயாரிப்பாளர் இல்லாமல் தடைப்பட்டு நிற்பதுதான் உண்மை.

- Advertisement -

சற்று முன்