தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே முகமூடி துப்பறிவாளன் சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். எப்போதுமே மிஷ்கின் படங்கள் வேற ஒரு லெவலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் இயக்கிய படங்களில் துப்பறிவாளன் படம் நடிகர் விஷாலுக்கு மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது. துப்பறிவாளன் 2 படம் உருவான நிலையில் விஷால் மிஷ்கின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக துப்பறிவாளன் 2 படத்தை நடிகர் விஷாலே இயக்கி நடித்து தயாரிக்கவும் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக சவரக்கத்தி நந்தலாலா மாவீரன் லியோ உள்ளிட்ட படங்களில் மிஷ்கின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் கல்லூரி பிரின்ஸிபால் கேரக்டரில் மிஷ்கின் நடிப்பு கொண்டாடப்பட்டது.
டிராகன் படத்தில் ஒரு அழுத்தமான அற்புதமான நடிப்பை இயக்குனர் மிஷ்கின் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் அவரது பண்பட்ட பக்குவப்பட்ட நடிப்புதான் படத்தை மிக அற்புதமாக கொண்டு சென்றது. வில்லனாக இல்லாமல் அதே நேரத்தில் வில்லன் போன்ற ஒரு கேரக்டரில் மிஷ்கின் கேரக்டர் அழகாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இன்று சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இப்போது நான் டைரக்ட் செய்துள்ள பிசாசு 2 டிரெயின் ஆகிய 2 படங்களோடு சினிமாவிலிருந்து அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விடுவேன் என்று பலரும் பேசிகிறார்கள். நானும் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நானும் சினிமாவில் சந்தோஷமாக இல்லை.
ஆனால் இன்னும் சினிமாவில் தான் இருந்து உதிரம் சிந்திக்கொண்டு இருக்கிறேன். நான் சினிமாவில் சந்தோஷமாக இருந்த காலகட்டம் போய்விட்டது. என்னை பட விழாவுக்கு பலரும் அழைக்கிறார்கள். தயவுசெய்து என்னை அழைக்காதீர்கள். அப்படி அழைத்தால் ஒரு 5 லட்சம் ரூபாய் கொடுங்கள். அதை வைத்து என் மகளை படிக்க வைப்பேன் என்று நடிகர் மிஷ்கின் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





