- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு? எல்லாம் வருண பகவான்தான் காரணமா? - ரஜினி...

வேட்டையன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு? எல்லாம் வருண பகவான்தான் காரணமா? – ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

- Advertisement -

ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் வேட்டையன். கடந்த 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில், இதுவரை 255 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தசெ ஞானவேல் இயக்கியிருக்கிறார்.. இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார். கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார்.

வேட்டையன் படத்தில் முக்கிய நட்சத்திர நடிகர்களாக மஞ்சு வாரியார், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. வேட்டையன் படமும் அதைவிட அதிகமாக வசூலிக்கும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த அளவுக்கு படம் ரசிகர்களை கவரவில்லை.

- Advertisement -

வேட்டையன் படத்தில் என்கவுண்டர் மற்றும் கல்வி வியாபாரம் ஆகிய இரண்டு சமூக விழிப்புணர்வு விஷயங்களை மையப்படுத்தி இந்த படத்தை தசெ ஞானவேல் இயக்கியிருக்கிறார். வேட்டையன் படத்தை பொருத்தவரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், அந்த அளவுக்கு கதை, திரைக்கதை, காட்சியமைப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்று தெரிய வருகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே திருப்தி அளித்தாலும் பொதுவான ரசிகர்களின் எதிர்பார்ப்பை வேட்டையன் நிறைவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் வேட்டையன் படத்துக்கு, மிகப்பெரிய அளவில் வசூலை எதிர்பார்த்திருந்த நிலையில், பல விதங்களில் வேட்டையன் படம் ஏமாற்றங்களை தந்துள்ளது. குறிப்பாக லப்பர் பந்து படம் 150 தியேட்டர்களுக்கு மேல் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் மெய்யழகன் படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் ரிலீஸான புதுப்படங்களும் நிறைய தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது.

- Advertisement -

அதனால் வேட்டையன் படம் 600க்கும் குறைவான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள பிளாக் படமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திரில்லர், திகில் படமான பிளாக் படம் ரிலீஸ் செய்யப்பட்ட போது, போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பல்வேறு பகுதிகளில், பல மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. வேட்டையன் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் 90 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. இப்போது தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை போதிய அளவு இல்லாததால், ஓடிடி தளத்தில் விரைவில் வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தியேட்டரில் வேட்டையன் படத்தை பார்க்க முடியாதவர்கள், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை விரைவில் காணலாம்.

- Advertisement -

சற்று முன்