- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த சமையல்காரர் - தகவல் தெரிந்த பிறகு புரட்சித் தலைவர் என்ன...

எம்ஜிஆருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த சமையல்காரர் – தகவல் தெரிந்த பிறகு புரட்சித் தலைவர் என்ன செஞ்சார் தெரியுமா? – கே பாக்யராஜ் சொன்ன நடந்த உண்மை!

- Advertisement -

ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, வழக்கமாக எம்ஜிஆர் சாப்பிடுகிற நேரம். டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்துட்டார். திடீர்ன்னு சாப்பாடு போடுகிறவன் வந்து எம்ஜிஆர் காலை கட்டீட்டு அழுதான். என்னை மன்னிச்சிடுங்க. நான் சாப்பாட்டுல விஷம் கலந்துட்டேன். யாரோ சொன்னாங்க, என்னமோ பண்ணினாங்க. நான் தெரியாம விஷம் கலந்துட்டேன். தப்பு பண்ணிட்டேன் என்று அழுகிறான். அங்கிருந்தவங்க எல்லாம் அதிர்ச்சி ஆயிட்டாங்க. சரி பரவாயில்லைன்னு எம்ஜிஆர் எழுந்திரிச்சுட்டார். கொஞ்சம் பணம் எடுத்துட்டு வரச்சொல்லி அவனுக்கு கொடுத்து, இதை வெச்சு ஏதாவது தொழில் செஞ்சு பிழைச்சிக்கோ என்று அவனை அனுப்பிட்டார். விஷம் வைத்தவனுக்கு இப்படி செய்றீங்களே? என மற்றவர்கள் கேட்ட போது, இத்தனை நாளா அவன் எனக்கு சாப்பாடு போட்டான். இனி அவனை யாரும் சமையல் வேலையில் சேர்த்துக்க மாட்டாங்க. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்? அதுதான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க பணம் கொடுத்தேன் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார் என்று கே பாக்யராஜ் அந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.

சற்று முன்