- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகருக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த இயக்குநர், கடைசியில் அவருக்கு மகனாக மாறிய சம்பவம் - இது...

பாலிவுட் நடிகருக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த இயக்குநர், கடைசியில் அவருக்கு மகனாக மாறிய சம்பவம் – இது நடந்தது நம்ம கோலிவுட்டில் தான்

- Advertisement -

சினிமா நடிகர்கள், படங்களில் என்ன மாதிரியான கேரக்டர்களை ஏற்று நடித்தாலும், அவரவர்களுக்கான தனிப்பட்ட குணாதியங்கள் நிறைய உண்டு. கேமரா முன் நடித்து, நடித்து சிலர் அந்த தனிப்பட்ட தங்களது சுயத்தை நாளடைவில் இழந்து விடுவதுதான் இங்கு பரிதாபம். ஆனால், ஒரு சிலர் புகழ் வெளிச்சத்தில் மயங்கி விடாமல், தங்களது சுய தன்மையை எப்போதும் உறுதியாக வைத்துக்கொள்கின்றனர். குறிப்பாக, பிறர் மீது அன்பு காட்டுவதில் தங்களை வெளிப்படுத்தி விடுகின்றனர்.

பாலிவுட் ஸ்டார் நடிகர்களில் மிக முக்கியமானவர் சஞ்சய் தத். இளம் வயதில் இருந்தே, இந்தி படங்களில் நடித்து, தன் நடிப்பு திறமையால் முன்னணி ஸ்டாராக வலம் வருபவர். தமிழில் முதன்முறையாக, விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில், ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் லியோ படத்தில் வில்லனாகவே வருகிறார்.

இந்நிலையில், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது அனுபவங்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் சஞ்சய் தத் குறித்து, நானாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்து பழகிய பிறகு அந்த பிம்பம் உடைந்துவிட்டது. நான் நினைத்ததற்கும், அவருக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை. அந்தளவுக்கு அவர் இனிமையான ஒரு நல்ல மனிதராக இருந்தார்.

அவர் தமிழில் பேசி, இந்த படத்தில் நடிக்க வேண்டும். அவர் இதுவரை தமிழ் படங்களில் நடித்தது இல்லை. அதனால், தினமும் ஈவ்னிங் அவருக்கு நான் தமிழில் டியூசன் சொல்லிக்கொடுத்து, தமிழ் கற்றுத் தருவேன். செல்போனில் தமிழ் வார்த்தைகளை ரெக்கார்டு செய்து அதை சின்சியராக கேட்டு தமிழ் வார்த்தைகளை பழகினார். இது நடந்த ஒரு வாரத்துக்குள் அவர் என்னை மகனாக நினைத்து பழக ஆரம்பித்து விட்டார்.

என் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னதில் கூட மைடியர் சன் என குறிப்பிட்டு அழைத்தார். இப்போது, இரண்டு மூன்று நாட்கள் நான் பேசாவிட்டால், கால் மீ சன் என மெசேஜ் எனக்கு அனுப்புவார். உடனே நான் அவரை அழைத்துப் பேசி விடுவேன். ஒரு நாள் என்னிடம், உன் அப்பாவை சந்திக்க ஆசைப்படுகிறேன் என்றார். உடனே, ஊரில் இருந்து அப்பாவை வரவழைத்தேன். இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பாவுக்கு இந்தி தெரியாது, சஞ்சய் தத்துக்கு தமிழ் தெரியாது. அதனால், அவர்களுக்கு நடுவில் ஒரு பெண் டிரான்ஸ்லேட்டரை அமர வைத்துவிட்டேன். நான் ஷூட்டில் இருந்ததால், அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. உங்கள் மகனை பார்த்து பெருமைப்படுகிறேன் என்று, என் அப்பாவிடம் சஞ்சய் தத் சொன்னதாக கேள்விபட்டேன், என்று கூறி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சற்று முன்