- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பட தயாரிப்பாளர் மகன் நடிக்கும் படத்தை இயக்க மறுத்த கௌதம் மேனன், லிங்குசாமி ...

விஜய் பட தயாரிப்பாளர் மகன் நடிக்கும் படத்தை இயக்க மறுத்த கௌதம் மேனன், லிங்குசாமி – அதிலும் ரூ. 5 கோடி சம்பளம் கேட்ட இயக்குனர் – கடைசியில் தயாரிப்பாளர் செஞ்சதுதான் இதுல ஹைலைட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள் இயக்குனர்கள் லிங்குசாமி மற்றும் கௌதம் மேனன். அதே போல் அதிரடி சண்டை படங்களையும் தந்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளனர். சமீபமாக இயக்குனர் கெளதம் மேனன் படங்களில் அதிகமாக நடித்த நிலையில், டைரக்ட் செய்வது குறைந்து போனது. இப்போது மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கிய விஷால் நடித்த சண்டக்கோழி, மாதவன் நடித்த ரன், கார்த்தி நடித்த பையா போன்ற படங்களும், கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, விண்ணை தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களும் இன்றும் பேசப்படும் படங்களாக தமிழ் சினிமாவில் இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தை தயாரித்தவர் எஸ்எஸ் லலித்குமார். செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் லியோ படத்தை தயாரித்தார். இதையடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்துக்கு லலித்குமார் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். எனினும் அவர் முதலில் கமிட்டான படங்களை முடித்த பிறகே, லலித்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த இடைவெளியில் தனது மகனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் இறங்கியுள்ளார். இதற்காக ரூ. 50 கோடி பட்ஜெட் ஒதுக்கி வைத்துள்ள அவர், பெரிய இயக்குனர் இயக்கும் படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்த முயற்சித்துள்ளார். இதற்காக இயக்குனர் கௌதம் மேனனை அணுகி அவர் பேசிய நிலையில், தன்னுடைய சம்பளம் ரூ. 5 கோடி, படத்தின் பட்ஜெட் ரூ. 12 கோடி என்றும் முடிவாகி உள்ளது.

- Advertisement -

ஆனால் சம்பளத்தை படத்தை முடித்த பிறகுதான், கௌதம் மேனனுக்கு தருவதாக லலித்குமார் கூறியிருக்கிறார். ஏனெனில் அவருக்கு நிறைய கடன் பிரச்னைகள் இருப்பதால், படம் ரிலீஸாகும் நேரத்தில் பிரச்னை ஏற்பட்டால் இந்த தொகையை அதற்கு தந்துவிடலாம் என லலித்குமார் திட்டமிட்டுள்ளார். அதற்கு கௌதம் மேனன் சம்மதிக்காமல், நிராகரித்து விட்டார்.

அதன்பிறகு இயக்குனர் லிங்குசாமியை லலித்குமார் சந்தித்த நிலையில், மகாபாரதம் கதையை நான் இயக்க உள்ளதால், இப்போதைக்கு உங்கள் பையன் நடிக்கும் படத்தை என்னால் இயக்க முடியாது என கைவிரித்து விட்டார். இதையடுத்து புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில், லலித்குமார் மகன் நடிப்பது உறுதியாகி விட்டது. ப்ரீ புரடக்சன்ஸ் பணியும் துவங்கியதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்