- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவுக்கும் கௌதம் மேனன் பட தயாரிப்பாளருக்கும் இவ்வளவு பெரிய பிரச்சனையா?- ஓபனாக போட்டு உடைத்த மூத்த...

சிம்புவுக்கும் கௌதம் மேனன் பட தயாரிப்பாளருக்கும் இவ்வளவு பெரிய பிரச்சனையா?- ஓபனாக போட்டு உடைத்த மூத்த  பத்திரிக்கையாளர்…

- Advertisement -

சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 48 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இதனிடையே திடீரென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்பு தன்னுடைய பேன்னரில் இரண்டு திரைப்படங்களில் நடித்து கொடுப்பதாக அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடித்து தரவில்லை என்று புகார் கூறியுள்ளார்.

ஐசரி கணேஷ் சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தயாரித்தவர். இவர் தற்போது சிம்பு மீது வைத்த புகார் விவகாரம் ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய யூட்யூப் சேன்னலில் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. அந்த வீடியோவில் அவர் கூறியது என்பது இதுதான்,

- Advertisement -

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு பிறகு ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து “கொரோனா குமார்” என்ற திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தை கோகுல் இயக்குவதாக இருந்ததாம். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் கோகுல் தானே நடிப்பதாக கூறினாராம். ஆனால் சிம்புவோ “அந்த கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர் நடித்தால்தான் நன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் இருவருக்கும் இடையில் சண்டையில் போய் முடிந்திருக்கிறது. அதன் பின் இந்த படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டாராம்.

அதன் பின் தேசிங்கு பெரியசாமியை ஐசரி கணேஷிடம் அனுப்பி வைத்தாராம் சிம்பு. தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போக உடனே படம் பண்ணலாம் என கூறியிருக்கிறார். ஆனால் தேசிங்கு பெரியசாமியோ, “இந்த கதையின் உரிமை கலைப்புலி தாணுவிடம் இருக்கிறது” என கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதன் பின் ஐசரி கணேஷ், கலைப்புலி எஸ் தாணுவிடன் சென்று அந்த கதைக்கான உரிமையை விட்டுக்கொடுக்கும்படி கேட்க, அதற்கு அவர், “இந்த கதையை சிம்புவை வைத்து பண்ணாதே, அவர் இந்த கதைக்கு தாங்கமாட்டார். இது ரஜினிக்காக எழுதப்பட்ட கதை. இதில் கமல் மாதிரி பெரிய நடிகர் நடித்தால்தான் நன்றாக இருக்கும்” என கூறினாராம்.

இந்த விஷயம் சிம்புவுக்கு தெரியவர, உடனே சிம்பு, நேராக கமல்ஹாசனிடமே சென்று, “உங்கள் பேன்னரில் நான் ஒரு படம் நடிக்க விரும்புகிறேன்” என கூறினாராம். உடனே கமல்ஹாசனும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதி, சிம்புவின் 48 ஆவது திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்தாராம். இது தாணுவுக்கும் ஐசரி கணேஷுக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாம். ஐசரி கணேஷ் சிம்புவின் மீது பிராது வைத்ததற்கான பின்னணி இதுதான் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்