சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சக்கை போடு போட்டுவிட்டது. அபிஷன் ஜீவிந்த் என்ற அறிமுக இயக்குனர், 24 வயதில் இயக்கிய இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர். பான் இந்தியா ஸ்டார் இயக்குனர் ராஜமவுலியே இந்த படத்தை மனம் திறந்து பாராட்டினார் என்றால் அந்தளவுக்கு இந்த படம் பேசியிருக்கிறது.
சசிக்குமார், சிம்ரன் மற்றும் அவர்களது 2 பிள்ளைகளுடன் தமிழ்நாடுக்கு கள்ளத்தனமாக வந்து விடுகின்றனர். ஒரு குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறும் அவர்கள் அந்த ஏரியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் உறவினர்களை விட நெருக்கமானவர்களாகி விடுகின்றனர். கடைசியில் அவர்களை போலீசாரிடம் இருந்து அந்த ஏரியா மக்களே காப்பாற்றுவதுதான் கதை.
சின்ன சின்ன சம்பவங்களை கோர்த்து அழகான மலர் மாலையாக தொடுக்கப்பட்ட இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைதான் பேசியது. கதைக்களம்தான் வெற்றியை கொடுத்தது. படத்தில் வந்த ஒவ்வொரு கேரக்டரும் மனதை தொட்டதுதான் இந்த படத்தின் அபார வெற்றிக்கு காரணம். இங்கே கதாபாத்திரங்கள்தான் ஜெயித்ததே தவிர, அதில் நடித்த கலைஞர்கள் அல்ல.
ஆனால் தக்லைஃப் போன்ற ஒரு படம், ஹீரோ கமல்ஹாசன் மற்றொரு ஹீரோ சிம்பு மற்றும் திரிஷா இசைப்புயல் ஏஆர் ரகுமான் என சிறந்த கலைஞர்களின் கூட்டத்தை வைத்துக்கொண்டு, இது எல்லாம் ஒரு படமா என்று ரசிகர்கள் விமர்சிக்கும் அளவுக்கு ஒரு மோசமான இயக்கி ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். அதுவும் திரிஷா கேரக்டரை இப்படி கொச்சைப்படுத்தி குந்தவையாக அவருக்கு கிடைத்த பெருமையை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டார்.
தக்லைஃப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த மிக மோசமான அடியை தொடர்ந்து அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்க இருந்த நடிகர் சிம்பு, மணிரத்னம் மொபைல் எண்ணையே தனது போனில் பிளாக் லிஸ்ட்டில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதே போல் ரஜினியும், மணிரத்னமும் இணைவதாக ஒரு தகவல் பரவிய நிலையில் ரஜினியும் அய்யோ மணிரத்னமா என்று அதிர்ச்சியாக கேட்டிருக்கிறார்.
ரஜினியை பொருத்த வரை வெற்றிப் பட இயக்குனர்களை அழைத்து தன் படங்களை இயக்க வாய்ப்பு தருபவர். தக்லைஃப் போன்ற மொக்கை படத்தை தந்த மணிரத்னத்துடன் இனி எப்போதுமே தப்பி தவறிக்கூட இணைந்து விடக் கூடாது. 50 வருடமாக சேர்த்து வைத்த மொத்த பேரையும் ஒரே படத்தில் காலி செய்து விடுவார் என்ற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.





