- Advertisement -
Homeபொழுதுபோக்கு32 ஆண்டு சாதனைக்கு இப்படியா போஸ்டர் வெளியிடுவீங்க? ஆசை நாயகன் அஜீத்குமாரை நீங்களும் வெச்சு செய்றீங்களா…...

32 ஆண்டு சாதனைக்கு இப்படியா போஸ்டர் வெளியிடுவீங்க? ஆசை நாயகன் அஜீத்குமாரை நீங்களும் வெச்சு செய்றீங்களா… ஆவேசப்பட்ட ஏகே ரசிகர்கள் – அட இதுல கூட போட்டியா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு, தமிழ் சினிமாவில் துவக்கத்தில் இருந்த பட்டப் பெயரே ஆசை நாயகன் அஜீத்குமார் என்பதுதான். ஆசை என்ற படத்தில் அவர் நடித்ததும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. பார்த்தவுடன் ஆசைப்படும் அழகில் அவர் இருந்ததும் மற்றொரு காரணமாக இருந்தது. அரவிந்தசாமி மாதிரி, அஜீத்குமார் மாதிரி பெண்ணுக்கு மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்வது கூட அப்போது வழக்கமாக இருந்தது.

இப்போதும் தலைமுடி, தாடி மீசை வெள்ளயைாக இருந்தாலும் அஜீத்குமாரை அழகான ஒரு மனிதராகவே ரசிக்க முடிகிறது. வயதானாலும் இன்னும் அவர் அழகனாகவே ரசிக்கப்படுகிறார். அப்படிப்பட்ட அஜீத்குமாரின் 32 ஆண்டு கால சாதனை குறித்த ஒரு போஸ்டரை ரத்தம் வழிகிற முகத்துடன் வெளியிட்டு விடாமுயற்சி படக்குழு வாழ்த்துகளை தெரிவித்திருந்தது.

- Advertisement -

ஆனால் அஜீத்குமார் நடிப்பில் முதன்முதலில் வெளியான படம் அமராவதி. இந்த படம் 1993ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. அந்த கணக்குப்படி பார்த்தால் 31 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனாலும் அதை ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிட்டு வாழ்த்து சொல்வது குளறுபடியாக உள்ளது. திடீரென இப்படி 32 ஆண்டுகளுக்கு வாழ்த்து சொல்ல என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் விஜய் நடித்த படம் குறித்த ஏதேனும் அப்டேட்டுகள் வெளியாகும் பட்சத்தில் அதற்கு போட்டியாக அஜீத்குமார் சார்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டியாக பதிவிடுவது வழக்கம் என்ற தகவல் உள்ளது. அதனால் நேற்று விஜய் நடித்த தி கோட் படத்தின் 3வது சிங்கிள் வெளியானதால், அதற்கு போட்டியாக தான் இந்த 32 ஆண்டுகள் வாழ்த்து போஸ்டரும் திடீரென வெளியானதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

விடாமுயற்சி படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்… யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சினிமாவில் 32 ஆண்டுகள் போராடி சாதித்த மனிதரை, மிக அழகான போஸ்டரில் காட்டாமல் ரத்தம் வழிந்தபடி அழுவது போல காட்டியிருப்பது ஏகே ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

நேற்று மாலை, தி கோட் படத்தில் இருந்து 3வது சிங்கிள் வெளியானது. இதில் இளம் வயதில் நடிகர் விஜய் இருப்பது போல காட்டுவதாக கூறி, டி ஏஜிங் முறையில் விஜயின் அழகிய தோற்றத்தையே மாற்றி விட்டனர். அவர் இருப்பது போலவே காட்டியிருந்தாலே இளமையாக தான் இருந்திருப்பார். சின்ன மீசை, முகவாயில் சிறுதாடி, கோரைப்புல் தலைமுடி என அவரை காட்டி வெங்கட்பிரபு விஜயை அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். அதே போல் நடிகர் அஜீத்குமாரின் 32 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துகள் சொன்ன விடாமுயற்சி படக்குழுவும், விஜய்க்கு போட்டியாக அஜீத்குமாரை ரத்த களறியாக காட்டி விட்டனர். என்று விமர்சித்து வருகின்றனர். இது பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது.

- Advertisement -

சற்று முன்