- Advertisement -
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993ம் ஆண்டில் வெளியான படம் ஜென்டில்மேன். இந்த படத்தின் கதையை முதலில் நடிகர் கமல்ஹாசனிடம் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் கூறிய நிலையில் கமல்ஹாசன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் நடிகர் சரத்குமாருக்கு முன்பணம் கொடுத்தும் கால்ஷீட் பிரச்சனையால் சரத்குமாரும் நடிக்க முடியவில்லை. இறுதியாக நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்து அந்த படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. தற்போது 33 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 11ம் தேதி 4கே தொழில்நுட்பத்தில் இந்த படம் மீண்டும் வெளியாக உள்ளது.





