- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் படம் ரிலீஸ் நாளில் நடிகர் விஜயின் ஜனநாயகன் வெளிவருகிறதா? - விரைவில் ரிலீஸ்...

நடிகர் தனுஷ் படம் ரிலீஸ் நாளில் நடிகர் விஜயின் ஜனநாயகன் வெளிவருகிறதா? – விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்பு!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டும் சென்சார் பிரச்னை காரணமாக இதுவரை இந்த படம் திரைக்கு வரவில்லை.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. எச்டி தரத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை பலரும் பார்த்த நிலையில் கோர்ட் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த படத்தை இணையத்தில் பகிரவோ டவுன்லோடு செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த விவகாரத்தில் ஜனநாயகன் படத்தை முறைகேடாக திருடி இணையத்தில் கசிய விட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 15ம் தேதி மும்பையில் ஜனநாயகன் படத்தை சென்சார் குழுவினர் பார்த்துவிட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாக கூறி சென்சார் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

இது நடிகர் விஜய் நடித்த கடைசி படம். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள அவர்தான் இனி தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் என்று பலரும் கூறி வருகின்றனர். அதனால் அரசியல் காரணங்களுக்காகவே ஜனநாயகன் படத்தை திரைக்கு வராமல் தடுத்தும் இணையத்தில் வெளியிட்டும் அரசியல் செய்துவிட்டதாகவும் ஒரு புகார் இருந்து வருகிறது.

- Advertisement -

இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி ஜனநாயகன் படத்துக்கு தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் அதாவது 24ம் தேதி சென்சார் போர்டு தரப்பில் சான்றிதழ் தருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகு 25 அல்லது 26ம் தேதிகளில் சென்னையில் தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து முக்கிய முடிவு செய்யப்படுகிறது. அதன்படி வருகிற 30ம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில்தான் அது இறுதி முடிவு செய்யப்படும். ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்த கர படமும் வருகிற 30ம் தேதி ரிலீஸ் என்பதால் விஜய் – தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன.

- Advertisement -

சற்று முன்