- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படம் - மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க இதுதான் காரணமா?...

நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படம் – மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க இதுதான் காரணமா? டைரக்டர் இப்படி வெச்சு செஞ்சுட்டாரே?

- Advertisement -

அதிக உச்சத்தில் இருப்பவர்கள் கண்டபடி ஆடக்கூடாது, அப்போது தடுமாறி விழுந்தால் உயரம் அதிகம் என்பதால் அடியும் பலமாக இருக்கும் என்று சிலரை தத்துவமாக எச்சரிப்பவர்கள் உண்டு. இது அரசியல்வாதிகளுக்கும் தொழில் முதலீட்டாளர்களுக்கும் குறிப்பாக சினிமாத்துறை சார்ந்தவர்களும் மிக சரியாக பொருந்தும்.

ஏனென்றால் மிக குறைந்த காலகட்டத்தில் மிக விரைவில் உச்சம் தொடுபவர்கள் அவர்கள்தான். அதனால் எந்த அளவுக்கு புகழில் செல்வாக்கில் உயரத்துக்கு சென்றாலும் அந்த அளவுக்கு பாதுகாப்பு உணர்வோடு அடங்கி இருந்தால் மட்டுமே நாளை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிக பாதிப்பின்றி நஷ்டமின்றி தப்பிக்க முடியும்.

- Advertisement -

இந்த விஷயத்தை சுத்தமாக மறந்ததால் தான் சர்தார் 2 படம் மிகப்பெரிய தோல்வியை நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படம் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ. 45 கோடியில் உருவான இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு பலத்த லாபத்தை கொடுத்தது.

இந்த சூழலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதே பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படம் கடந்த 10ம் தேதி வெளியானது. 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் இந்த படத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் திணறிப் போயிருக்கின்றனர். மூச்சு திணற திணற அடிச்சாங்க என்று வடிவேலு சொல்வது போல் டாக்குமென்ட்ரி படம் போல எடுத்து வைத்து ரசிகர்களை சோதித்து விட்டனர்.

- Advertisement -

இந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதாவது சர்தார் படம் ரூ. 45 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் சர்தார் 2 படத்தை ரூ. 110 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். படத்தின் தயாரிப்பு செலவுகள் கட்டுப்பாடின்றி தாறுமாறாக போயுள்ளது. இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரன் தான்.

அதிகபட்சமாக சர்தார் 2 படத்தை 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்திருந்தால் படம் தோல்வியடைந்த போதிலும் இவ்வளவு பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்காது. 110 கோடி ரூபாயில் உருவான படம் என்பதால் இப்போது ஏற்பட்டுள்ள நஷ்டம் பலத்த அடியாக தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் மாறியுள்ளது. 40 நிமிட பிஸினஸ் கட் படம் பார்த்து ஏமாந்து அதிக தொகை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் இப்போது செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்