- Advertisement -
Homeபொழுதுபோக்குஆடையின்றி நடிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை - ஆனால் அப்போது நடித்தேன் - ஓபனாக...

ஆடையின்றி நடிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை – ஆனால் அப்போது நடித்தேன் – ஓபனாக பேசிய நடிகை அமலா பால்!

- Advertisement -

சிந்து சமவெளி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் விதார்த் ஜோடியாக நடித்த மைனா படம் நல்ல பெயரை வரவேற்பை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து தலைவா வேட்டை தெய்வத் திருமகள் காதலில் சொதப்புவது எப்படி வேலையில்லா பட்டதாரி வேலையில்லா பட்டதாரி 2 நிமிர்ந்து நில் பசங்க 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்த அமலா பால், ஆடை என்ற வித்யாசமான ஒரு கதைக்களம் கொண்ட படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மேயாத மான் பட இயக்குனர் ரத்னக்குமார் இயக்கத்தில் 2009ம் ஆண்டில் உருவாகி வெளியான ஆடை படத்தில் கதை நாயகியாக நடித்த நடிகை அமலா பால், படத்தில் பல காட்சிகளில் உடலில் ஆடையின்றி நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பலத்த பாராட்டை பெற்றுத் தந்தாலும், அவர் உடலில் ஆடையின்றி நடித்தது பெரிய சர்ச்சையானது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அமலா பால் கூறியதாவது,
நான் நடித்த ஆடை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதற்கு பின் அது போன்ற கதைகளையே இயக்குனர்கள் என்னிடம் கொண்டு வந்தார்கள். அதன் காரணமாகவே சில படங்களில் நடிப்பதையே தவித்தேன். என்னை டைப் காஸ்ட் செய்து விடுவார்களோ என்று பயந்தேன்.

- Advertisement -

இப்போதைக்கு இருக்கும் மெச்சூரிட்டிக்கு ஆடை போன்ற படங்களில் நடிக்கவே மாட்டேன். அதற்கு தைரியம் இல்லாமல் இல்லை. ஆனால் தற்போது அந்த மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கான அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். ஆடை கதையை சொன்ன போது இந்த கதையை எப்படி படம் ஆக்குவார்கள் என்ற சந்தேகம் என் மனதுக்குள் அதிகமாகவே இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அந்த படப்பிடிப்பை எப்படி நடத்துவார்கள் என்ற ஏகப்பட்ட கேள்விகளை கேட்டேன். இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் எனக்கு கொடுத்த நம்பிக்கை மற்றும் படப்பிடிப்பை அவர்கள் குறைந்த ஆட்களை வைத்து நடத்திய விதம்தான் அந்த படத்தில் நான் நடிக்கவே காரணம் என்று நடிகை அமலாபால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்