- Advertisement -
கோவையைச் சேர்ந்த க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய வயலட் கனவு என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பி நித்யானந்தம் டைரக்ட் செய்திருக்கிறார். அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் முஸ்தரி இணைந்து தயாரித்துள்ளனர். லிலவந்த் லிவின் ரெய்னா கரட் அரவிந்தராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஜெகன் கல்யாண் இசையமைத்திருக்கிறார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குனர் பி நித்யானந்தம் கூறுகையில், இது ஒரு உளவியல் க்ரைம் சப்ஜெக்ட் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ராஜேஷ்குமாரின் நாவல்களை படிக்கும்போது ஒரு திரைப்படம் பார்ப்பது போல் தான் இருக்கும். அந்த வகையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரது கதையை திரைக்கதையாக இந்த படத்தை தந்திருக்கிறேன் என்றார்.





