நடிகர்கள் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி கொள்கின்றனர். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த சின்ன சின்ன விஷயங்களை கூட ஊதி ஊதி பூதாகரப்படுத்தி விடுவது அதிகரித்து வருகிறது. அதற்கு சமூகவலைதளங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன.
நடிகர் தனுஷ், அடிக்கடி விமர்சனங்களில் சிக்கி கொள்பவர்தான். சினிமா வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருபவர். தனுஷ் எங்கள் மகன் என ஒரு வயதான தம்பதி, கோர்ட்டில் வழக்கு போட்ட கதை எல்லாம் அவரது வாழ்வில் நடந்துவிட்டது.
தனுஷ், நடிகை அமலாபால் உடன் அதிக நெருக்கத்தில் இருந்ததால்தான், அவர் கணவரை விட்டு பிரிந்தார் என்றும், ஐஸ்வர்யா – தனுஷ் பிரிவுக்கும் இதுபோன்ற தனுஷின் தவறான நடத்தை தான் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் தனுஷ் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். யாத்ரா, லிங்கா என்ற பெயர்கள் கொண்ட அவர்கள் இருவருக்குமே இன்னும் 18 வயது ஆகவில்லை. தாத்தா ரஜினிகாந்த் வீட்டிலும், மற்றொரு தாத்தா, தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா வீட்டிலும் இருவரும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா, ஆர்15 பைக்கை ஓட்டிப் பழகுகிறார். அருகில் இருக்கும் ஒருவர், பைக் ஓட்டுவது குறித்து அவருக்கு பயிற்சி தருகிறார். இது ரஜினிகாந்த் வீடு இருக்கும் போயஸ்கார்டன் பகுதி என்று தெரிகிறது. இதை ஒருவர் புகைப்படம், வீடியோ எடுக்க, அந்த உதவியாளர் எடுக்காதே என்று அறிவுறுத்துகிறார்.
எனினும் தனுஷின் மகன் யாத்ரா, பைக் ஓட்டிப் பழகும் வீடியோ காட்சிகளில் சமூகவலைதளங்களில் பரவி, வைரலாகி விட்டது. 18 வயது கூட ஆகாத யாத்ரா, எப்படி பைக் ஓட்டி பழகலாம், அவருக்கு எல்எல்ஆர் வாங்கப்பட்டதா, தாத்தா ரஜினி, தன் பேரனுக்கு இதை சொல்லக் கூடாதா, கண்டிக்க மாட்டாரா, தனுஷ் இதை எல்லாம் மகனுக்கு சொல்ல மாட்டாரா என, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பறக்கின்றன.





