நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகை சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, லைலா, கனிகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிக்க வேண்டிய அத்தனை போர்ஷன்களும் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், விஜய் இனி அடுத்த கட்டமாக தனது அவரது 69 படத்துக்கு இப்போது தயாராகி வருகிறார்.
விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல தரமான சம்பவங்களை தொடர்ந்து அரங்கேற்றம் செய்து வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அந்த வகையில் இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் நடிக்கிறார் அதேபோல் நடிகர் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். வசீகரா படத்தில் நடித்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில், கோட் படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
கோட் படத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த், இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக, ரசிகர்களை சந்திக்க வருகிறார். அதேபோல் மறைந்த காமெடி நடிகர் விவேக்கும் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் சில காட்சிகள் வருகிறார் என்று குறிப்பிடப்படுகிறது.
செந்தூரப்பாண்டி படத்தில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்த விஜய்க்கு அண்ணனாக நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தவர் கேப்டன். அதே போல் பல படங்களில் விஜயுடன் காமெடி நடிப்பில் அசத்தியவர் விவேக். ஆக விஜயகாந்த், விவேக் இருவருக்கும் மரியாதை, நன்றியை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் அவர்கள் இருவரும் ஏஐ தொழில் நுட்பத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இப்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக இந்தப் படத்தில் சிஎஸ்கே கிரிக்கெட் அணியை சேர்ந்த சில வீரர்களும் நடித்திருப்பது தெரிய வருகிறது. அந்த வீரர்களுடன் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகராக வெங்கட் பிரபுவும் சில காட்சிகளில் கோட் படத்தில் வருகிறார் என்ற தகவலும் உறுதியாகி இருக்கிறது. அதாவது சிஎஸ்கே அணியின் மிக தீவிரமான ரசிகரான வெங்கட் பிரபு, விஜய் படத்தில் அதை பயன்படுத்திக்கொண்டு சிஎஸ்கே அணி வீரர்களையும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைத்து இருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.





