- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, எனக்கு உடம்பு சரியில்லாதப்போ நடிகர் சிரஞ்சீவி சாருக்கு கால் பண்ணி ஹெல்ப் கேக்கலாம் என்று ஒரு நண்பர் மூலமாக அவரது நம்பர் வாங்கினேன். எனக்கு உடம்பு சரியில்லே அண்ணா. உங்களால் முடிந்த உதவியை பண்ணுங்கன்னு மெசேஜ் அனுப்பினேன். அடுத்த பத்து நிமிஷத்துல அவரே போன் பண்ணி விசாரிச்சார். அப்பல்லோ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிடுங்கன்னு சொன்னார். ஏதோ ஒரு லட்சம் தருவாருன்னு நினைச்சேன். ஆனா அவர் எனக்கு அட்மிஷன் பீஸ் 200 ரூபாயில் இருந்து முழு செலவையும் அவர்தான் பார்த்துக்கிட்டார். கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் எனக்காக மருத்துவ செலவு பண்ணினார் என்று நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





