- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த...

அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம்… – அட ஹீரோயின் விஜய் பட நடிகையா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக அவரது பல படங்களில் பணிசெய்தவர் அட்லி. பிறகு ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் படங்களை இயக்கினார். ஹாட்ரிக் வெற்றிப் படங்களை தந்த அட்லி முன்னணி இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இந்தியில் பதான் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லியை அழைத்து தனது ஜவான் படத்தை இயக்க வாய்ப்பளித்தார். தீபிகா படுகோன் நயன்தாரா பிரியாமணி விஜய் சேதுபதி யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

இதையடுத்து பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை வரவேற்பை பெற்ற இயக்குனர் அட்லி உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு விசேஷங்களில் கலந்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவராக இந்தி சினிமாவில் மாறினார். ரூ. 40 கோடி மதிப்பில் மும்பையில் அலுவலகம் திறந்த இயக்குனர் அட்லி தனது சம்பளத்தை ரூ. 100 கோடியாக அதிகரித்து விட்டார்.

இந்நிலையில் புஷ்பா புஷ்பா 2 படங்களில் அபார வெற்றிக்கு பிறகு ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ரூ. 175 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு மறுத்து விட்டது.

மேலும் படத்தின் இயக்குனர் அட்லியும் தனது சம்பளம் ரூ. 100 கோடி கேட்ட நிலையில் படத்தின் பட்ஜெட் இயக்குனர் ஹீரோ சம்பளம் காரணமாக இந்த படத்தை தயாரிப்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் யோசித்து வந்தது. இப்போது புஷ்பா 2 படம் ரூ. 1800 கோடி வசூலித்த நிலையில் சம்பளம் பிளஸ் பிராப்பர்டி ஷேர் அடிப்படையில் அல்லு அர்ஜூன் மற்றும் அட்லி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி அட்லி இயக்கும் இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவர் ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆன நிலையில் அவரது சம்பளம் ரூ. 30 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா, 2002ம் ஆண்டில் வெளியான தமிழன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்