- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய அந்த நபர்? - பெட்டியில் அத்தனை லட்சங்கள் இருந்ததா?...

பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய அந்த நபர்? – பெட்டியில் அத்தனை லட்சங்கள் இருந்ததா? – இது உருட்டா, இல்லே உண்மையா?

- Advertisement -

விஜய் டிவியில் நடந்துவரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. 90 நாட்களை கடந்த நிலையில், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. இந்தமுறை டைட்டில் வின்னர் யார் என்பதில் பரபரப்பும், ஆர்வமும் பார்வையாளர்கள் மத்தியில் எகிறி வருகிறது.

கடந்தமுறை பிக்பாஸ் 6வது சீசனில், அறம் வெல்லும் என்பதையே தன் மூலமந்திரமாக வைத்திருந்த விக்ரமன், டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அசீம் வெற்றி பெற்றார். ஆனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே அவர் அடாவடி பேர்வழியாக நடந்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் இந்தமுறை துவக்கத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளுக்கு ஓய்வே இல்லை என்று சொல்லலாம். தொடர்ந்து ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டது மட்டுமின்றி, மிக மிக தரம்தாழ்த்தி பேசிக்கொண்டது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது.

போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசனையே ஆளாளுக்கு விமர்சித்தது இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில், தற்போது 90 நாட்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

- Advertisement -

துவக்கத்தில் இருந்தே நிகழ்ச்சியில் விசித்ராவுக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது. அவர் உள்பட 7 பேர் இந்தவார நாமினேசன் லிஸ்ட்டில் உள்ளனர். டிக்கெட் டூ பினாலே வென்ற விஷ்ணு நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார், இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டு, தொகை உயர்த்தப்பட்டு வந்தது.

இதில் பணப்பெட்டிக்குள் 13 லட்சம் ரூபாய் வரை பெட்டிக்குள் பணம் வைக்கப்பட்ட நிலையில், 8 பேரில் ஒரு போட்டியாளர் பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டார் என்றும், அவர் நடிகை விசித்ரா என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், அது உண்மையா, உருட்டா என்பது இதுவரை உறுதியாகவில்லை. ஆனால் டைட்டில் வின்னர் அவர்தான் என பலரும் கூறி வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பதும் பார்வையாளர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்