- Advertisement -
Homeபொழுதுபோக்குநீ அப்பனா, இல்லே மாமாவா ன்னு என்னை தியேட்டர்ல திட்டுனாங்க - இந்த அருமையான...

நீ அப்பனா, இல்லே மாமாவா ன்னு என்னை தியேட்டர்ல திட்டுனாங்க – இந்த அருமையான குணச்சித்திர நடிகருக்கு இப்படி ஒரு அவமானமா

- Advertisement -

சினிமா நடிகர்களில் சில நடிகர்கள் மட்டுமே, எல்லாவிதமான கேரக்டர்களிலும் எளிதாக பொருந்தக் கூடியவர்கள்தான். அவர்களால் ஹீரோ, வில்லன், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என, எல்லாவிதமான நடிப்பிலும் எளிதில் ஸ்கோர் செய்துவிட முடியும். தமிழ் சினிமாவில் அப்படி ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெருமை தலைவாசல் விஜய்க்கு உண்டு.

தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமானதால், ஏற்கனவே சினிமாவில் சில விஜய்கள் இருந்ததால், தனது முதல்படத்தின் பெயரையே தனது, பெயருக்கு முன்னதாக வைத்துக்கொண்டார். அதுவே, அவரது அடையாளமாகி விட்டது. ஒரு பாத்திரத்தை சிறப்பாக்க வேண்டும் என்றால், அது தலைவாசல் விஜய் போன்ற நல்ல நடிகர்களால்தான் முடியும்.

- Advertisement -

தேவர்மகன், மகளிர் மட்டும், சிம்மராசி, உன்னை நினைத்து, காதல் கோட்டை, புதுப்பேட்டை என பல படங்களில், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தலைவாசல் விஜய். அதிலும் குடிபோதை ஆசாமியாக, சுயநலம் பிடித்த மனிதனாக, ஆட்டோ டிரைவராக, கர்வம் பிடித்த மனிதராக என, எந்தவிதமான கேரக்டர் என்றாலும், தனது நடிப்பால் தனிமுத்திரை பதித்து வருபவர் தலைவாசல் விஜய்.

இதில் உன்னை நினைத்து படத்தில், லைலாவின் தந்தையாக தலைவாசல் விஜய் நடித்திருப்பார். ஏழ்மையான குடும்பத்தை நடத்த முடியாமல், முதலில் சூர்யாவை லைலாவுக்கு திருமணம் செய்ய வைக்க முயற்சிப்பார். பின், வசதியான ராம்ஜி வந்தவுடன் சூர்யாவை கழட்டி விடுவார். இது நடிப்பு தான் என்றாலும், அந்த கேரக்டர் ரசிகர்களுக்கு அவர் மீது பயங்கர கோபத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், சினிமா பயணம் பற்றிய பல விஷயங்களை தலைவாசல் விஜய் மனம் விட்டு பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது, சில நாட்களுக்கு முன் நானும், சூர்யாவும் கேரளாவில் கொச்சினில் இருந்து விமானத்தில் பயணித்தோம். அப்போது வரிசையில் நின்ற போது பலரும் எங்களை பார்த்து, உன்னை நினைத்து படம் பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர். அந்த படத்துக்கு பிறகு, இத்தனை வருடங்களில் நானும், சூர்யாவும் நிறைய படங்கள் செய்த பிறகும் உன்னை நினைத்து படம் பற்றி பேசியது ஆச்சரியமாக இருந்தது.

உன்னை நினைத்து படத்தில், ஒரு தந்தையாக தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே சூர்யாவை மறுப்பேன். ஆனால், அந்த இடத்தில் நல்ல மாப்பிள்ளையாக பார்க்க, அவரை செலக்ட் பண்ண, அனலைஸ் பண்ண தெரியாது. இது, நிஜ வாழ்க்கையில் பலரும் செய்கிற தவறுதான். அதை எடுத்துக்காட்ட தான் இந்த படம். ஆனால், அதற்காக என்னை ரசிகர்கள் திட்டினர். நீ பெத்த அப்பாவா, மாமாவா டா என தியேட்டர்ல என்னை கேட்டாங்க, என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் தலைவாசல் விஜய்.

- Advertisement -

சற்று முன்