- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்தில் இப்படி ஒரு சொதப்பல் சம்பவம் நடந்திருக்கிறதா? என்னய்யா இது? இயக்குனர் வெற்றிமாறன்...

விடுதலை 2 படத்தில் இப்படி ஒரு சொதப்பல் சம்பவம் நடந்திருக்கிறதா? என்னய்யா இது? இயக்குனர் வெற்றிமாறன் இப்படி ஒரு தப்பை செய்யலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் வௌியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கடந்த ஆண்டில், விடுதலை படம் வெளியானது. காமெடி நடிகர் சூரியை, இந்த படத்தில் ஹீரோவாக வெற்றிமாறன் அறிமுகப்படுத்தி இருந்தார்.

தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை மிக சிறப்பாக சூரி பயன்படுத்திக்கொண்டார். ஆனால் உண்மையின் கதைப்படி படத்தின் நாயகன் விஜய் சேதுபதிதான் என்பது நேற்று வெளியான விடுதலை 2 படம் பார்த்த ரசிகர்களுக்கு மிக தெளிவாக புரிந்திருக்கும். 2ம் பாகத்தில் சூரிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.

- Advertisement -

ஆனால் விடுதலை முதல் பாகத்துக்கு கிடைத்த அபார வரவேற்பு, அசுர வெற்றியால் அடுத்து சூரி நாயகனாக கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் நடித்தார். இதில் கருடன் நல்ல வரவேற்பை பெற்றது. கொட்டுக்காளி ஏமாற்றத்தை தந்தது. இப்போது மாமன் என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று விடுதலை 2 படம் வெளியான நிலையில், படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக கிடைத்து வருகின்றன. உலகத்தரத்தில் ஒரு படம் என்றும், வெற்றிமாறன் தனது இயக்கத்தில் வேற லெவலில் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் மிகப்பெரிய தவறை இயக்குனர் வெற்றிமாறன் செய்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது விடுதலை 1, 2 பாகங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், விடுதலை முதல் பாகத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், போலீஸ் எஸ்பி கௌதம் மேனன் வரும் காட்சிகளில் அவருடன் போலீஸ் அதிகாரியாக வருவார்.

ஆனால் நேற்று வெளியான விடுதலை 2ம் பாகத்தில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பண்ணையார் கேரக்டரில் நடித்திருக்கிறார். அது எப்படி முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர், 2ம் பாகத்தில் பண்ணையாராக மாற முடியும். முதல் பாகத்தில் போலீஸ், 2ம் பாகத்தில் பண்ணையார் என ஒருவரே நடித்திருப்பதை ரசிகர்கள் பார்த்தவுடன் தெரிந்துக்கொள்ள மாட்டார்களா, இந்த மாபெரும் தவறை, சொதப்பலை இயக்குனர் வெற்றிமாறன் செய்யலாமா, என கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்