- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல்வாதி கமல்ஹாசனை, இந்தியன் தாத்தாவாக ரசிகர்கள் விரும்பவில்லையா? - முதல் நாள் முதல் காட்சி ரிசல்ட்...

அரசியல்வாதி கமல்ஹாசனை, இந்தியன் தாத்தாவாக ரசிகர்கள் விரும்பவில்லையா? – முதல் நாள் முதல் காட்சி ரிசல்ட் எதிர்பார்த்தபடி இல்லையே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்படுபவர். ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமான கமல்ஹாசன், இப்போது 69 வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் ஒரு படத்துக்கு சம்பளமாக 150 கோடி ரூபாய் வாங்கும் அளவுக்கு, தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டார் நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி பான் இந்தியா படமாக, பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி படத்தில், கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப் படம் இப்போது 900 கோடி ரூபாய் வசூலை கடந்து 1000 கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது கமல்ஹாசன் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டைரக்டர் மணிரத்தினம் டைரக்ட் செய்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 750 திரைகளிலும், உலகம் முழுவதும் 5000 திரைகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஏனெனில் ரஜினி, விஜய், அஜித்குமார் நடித்த படங்கள் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சி என்ற வகையில், தியேட்டர்களில் ரசிகர்களின் ஆரவாரம் களைகட்டும், கூட்டமும் அலைமோதும். தியேட்டர் முன்பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பெரிய அளவில் தங்களது அபிமான நடிகரின் படத்தை வரவேற்று கொண்டாடுவார்கள்.

- Advertisement -

ரஜினி நடித்த ஜெயிலர் படம் ரிலீஸான போதும், விஜய் நடித்த லியோ படம் ரிலீசான போதும், இதுபோன்ற ரசிகர்களின் ஆரவாரத்தை தியேட்டர்களின் முன்னால் பார்க்க முடிந்தது. ரஜினி படங்களுக்கும் ரசிகர்கள் பெரிய ஆரவாரத்தை தந்து வருகின்றனர். அஜித் படம் வெளிவரும் போதும் இதே போன்ற ஒரு சந்தோஷத்தை, கொண்டாடத்தை அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் தியேட்டர்களில் காண முடிகிறது.

ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இன்று வெளியான இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த விதமான பெரிய ஆரவாரம், கொண்டாட்டம் தெரியவில்லை. தமிழகத்தில் பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இன்றி முதல் நாள் முதல் காட்சியே காற்று வாங்குகிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன், திமுக ஆதரவாளராக உள்ளார். சினிமாவில் லஞ்சம் ஊழலை எதிர்த்து பேசும் இந்தியன் தாத்தாவாக கமல் நடிப்பார், நிஜத்தில் திமுகவை ஆதரிப்பார் என்ற அதிருப்தியில் ரசிகர்கள் இந்தியன் 2 படத்தை புறக்கணித்து விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

- Advertisement -

சற்று முன்